பாலஸ்தீனத்தில் விளையாட்டு மைதானத்துக்கு, சிங்கத்துடன் வந்த ரசிகர்
பாலஸ்தீனத்தில் கால்பந்தாட்ட ரசிகர் ஒருவர் சிங்கக்குட்டியுடன் மைதானத்தில் அமர்ந்து விளையாட்டை ரசித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் நடத்தப்படும் ‘பிரிமியர் லீக்’ விளையாட்டு போட்டிகளை போன்றே, பாலஸ்தீனத்திலும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அங்கு கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகம் என்பதால், அடிக்கடி கால்பந்தாட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு முறையும் நிரம்பி வழியும் ரசிகர்களின் கூட்டத்தால், ஆட்டங்கள் களை கட்டும்.
இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி சாஹாபாப் ரபாப் அணிக்கும், எல்-சடாக்கா அணிக்கும் இடையே பரபரப்பான போட்டி நடந்துக் கொண்டிருந்தது. இருப்பினும் ரசிகர்கள் கால்பந்தாட்ட விளையாட்டினை ரசிக்காமல், காலரியில் நின்று கொண்டிருந்த சாத் அல்தீன் அல்-ஜமால் என்ற ரசிகரை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அதற்கு காரணம் அல்-ஜமால் தனது கையில் சிங்கக்குட்டியை வைத்துக்கொண்டு ஆட்டத்தை ரசித்தது தான்.
அலெக்ஸ் என்ற பெயரிடப்பட்ட அந்த சிங்கக்குட்டியை, அவ்வப்போது செல்லமாக அணைத்துக்கொண்டு ஆட்டத்தை கண்டுகளித்துக் கொண்டிருந்தார் அல்-ஜமால். இதற்கு ஒரு படிமேலாக அந்த சிங்கக்குட்டிக்கு தனது விருப்பமான கால்பந்தாட்ட அணியின் ஜெர்ஸியை அணிவித்து தன்னுடன் கொண்டு வந்திருந்தார்.
கால்பந்தாட்ட ரசிகரான அல்-ஜமால் தனது வீட்டில், அலெக்ஸ் மற்றும் மோனா என்ற இரண்டு சிங்கக்குட்டிகளை வளர்த்து வருகிறார். தெற்கு காசாவில் உள்ள ரபா என்ற நகரில் வசித்துவரும் அல்-ஜமால், அங்கிருக்கும் வனவிலங்கு பூங்காவிலிருந்து இந்த இரு சிங்கக்குட்டிகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
அல்-ஜமாலின் குடும்ப உறுப்பினர்கள் போன்று பழகிவிட்ட இந்த சிங்ககுட்டிகள், அல்-ஜமாலுடன் இணைந்து கால்பந்தும் விளையாடுகின்றன. குளிப்பது, உண்பது, உறங்குவது என அத்தனை அன்றாட நிகழ்வுகளையும் அல்-ஜமாலுடன் தான் அவை செலவிட்டு மகிழ்கின்றன. இது பற்றிய செய்திகள் வலைத்தளங்களில் பரவ, அல்-ஜமாலுக்கு பாராட்டுகளும், குற்றச்சாட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

பாலஸ்தீனத்தில் பிரச்சினை, ஆக்கிரமிப்பு, மரணங்கள், படுகொலைகள், மக்கள் கஷ்டத்தில் இருக்கின்றார்கள் என்றெல்லாம் சொல்லி கவிதை, கட்டுரை பயான் என்று இங்கே உசுப்பெற்றுகின்றார்களே? சிங்கங் குட்டியுடன் உதைப்பந்தாட்டம் பார்க்கச் செல்லும் மகிழ்வு நிலை இலங்கையில் கூட இல்லையே?
ReplyDeleteபலஸ்தீனில் எல்லாம் மிக இயல்பாக நடக்கின்றது என்று காட்ட இப்படி ஒரு ஏற்பாடா?