Header Ads



மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால், அது முஸ்லிம்களுக்கு ஆபத்தாக மாறிவிடும் - முஜிபுர் ரஹ்மான்

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் அது முஸ்லிம்களுக்கு ஆபத்தாக மாறிவிடும் என மேல்மாகாண சபை உறுப்பனரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மருதானையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுத் தேர்தலொன்று விரைவில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. இனவாதம் பேசி அரசியல் செய்த காலம் இப்போது முடிவடைந்து வருகின்றது. இந்நிலையில் மீண்டும் இனவாதத்தை கிளப்பி அதனூடாக அரசியல் செய்வதற்கு ஒருசாரார் முயற்சிக்கின்றனர்.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இதற்கு தலைமை வகிக்கப்போகிறார் என முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு மஹிந்த தலைமையிலான அணியினர் வலுபெற்றால் முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் ஆபத்தாக அமைந்துவிடும். எனவே ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களையும் உறுதிப்படுத்துவதனூடாக எமக்கு வரும் ஆபத்துகளிலிருந்து ஓரளவு பாதுகாக்பை பெறலாம் எனவும் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

3 comments:

  1. This statment also kind of RACSIM.we sholud say if MR come to power our country will spoil again.pls correct our selves

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் இன்னும் முஸ்லிம்களாக மாறியதாக தெரியவில்லை, மேலும் மற்றவருக்கு முன்மாதிரியாகவும் இல்லை, அல்லாஹ்வை தவிர வேறு யாரும் முஸ்லிம்களை பாதுகாக்க முடியாது, இவ்வாறான மாற்றத்தை அல்லாஹ் மஹிந்தாயால்தான் மாற்ற நாடினால் அதையும் தவிர்க்க முடியாது அல்லவா.....
    Muslims are still not been improved on being a model Muslim to others, no one can protect Muslims except Allah, and if almighty Allah wants this change by Mahinda then that is also unavoidable

    ReplyDelete
  3. அசாத் சாலியை MY3 லண்டனுக்கும் கூட்டிக்கொண்டு போய், ஹஜ் கோட்டாவும் கொடுத்து அவரின் வாய்க்கு சீல் வைத்தாகிட்டு. இனி இந்த நபருக்கும் ஏதோ தேவைப்பாடு உள்ளதால் இவ்வாறு பேச்சு வருகின்றது இவர்களின் வாயிலிருந்து.

    MY3 ஐ ஜனாதிபதியாக ஆக்கிவிட்டு, UNP க்கு அதிகாரம் கொடுங்கள் என்று வாய் கூசாமல் பேச இவர்களுக்கு வெட்கமில்லையா?

    அவர்கள் இனவாதம் பேசுகின்றார்கள் என்று நாம் இனவாதம் பேசுவது எந்த வகையில் நியாயம்?

    உங்களிடம்தான் இனவாதமும், பிரதேச வாத கொள்கையும் தான்தோறித்தனமாக தலைமேல் வெள்ளமாக உள்ளது.

    இஸ்லாமியனாக, உதாரண புருசர்களாக மாறுங்கள், நிட்சயமாக அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.