ஞானசாரருக்கு சரத் பொன்சேக்காவின் உபதேசம்
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் பௌத்த மத கோட்பாடுகளை பின்பற்ற வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி பீலட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவி விலகுமாறு கோரும் உரிமை ஞானசார தேரருக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த கால அரசாங்கங்களைப் போன்று நல்லாட்சி அரசாங்கம் எவரையும் பழிவாங்காத காரணத்தினாலேயே இவ்வாறு ஞானசார தேரரினால், ஜனாதிபதியை விமர்சனம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஞானசார தேரரும் அவரது அமைப்பும் எவ்வாறான நிலைப்பாட்டை பின்பற்றி வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்க ஊழல் மோசடிகள் தொடர்பில் ஞானசார தேரர் எதுவும் குறிப்பிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
By becoming a good Bhudist ven, Gnanasara could a lot for Bhudism!
ReplyDeleteசெவிடன் காதில் சங்கு ஊதினமாதிரிதான் இவன் தெரிந்து கொண்டே பணத்திற்காக யூதனின் நோர்வே புரோக்கரின் வலையில் சிக்குண்டவன்.இவனுக்கு சிறைவாசம் தான் தகுதியான தண்டனை.
ReplyDeleteநேரடியாக இவருக்கு புத்தி சொல்வதை விட இவருடைய மனைவி மற்றும் பெண் பிள்ளைகளிடம் கூறி இவருக்கு எட்வைஸ் பன்னவும். பௌத்த தர்மத்தைப் பின்பற்றுவதில் தன்னிகரற்ற துறவியல்லவா இவர்? எனவே தான் இவர் இவ்வாறு நாடகமாடுகிறார்.
ReplyDelete