'இசைமுரசு ஓய்ந்தது' - ஏ.எச்.எம். அஸ்வர்
'இசைமுரசு' நாகூர் எம். ஹனீபா மரணமானார் எனும் துயரச் செய்தி பேரிடியாக விழுந்தது. இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்த இசை முரசு அவர்கள், ஏப்ரல் 8ம் திகதி இரவு இறையடி சேர்ந்து விட்டார் எனும் சோகம் சுமந்த செய்தியை நம்ப முடியவில்லை. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்
இப்படி தமிழ்கூறும் நல்லுலகில், இசையை விரும்புபவர்களும், கலைத்துறை காதலர்களும் பலவாறு தம் மனக்கவலைகளை வெளிப்படுத்தி வருவதை அறிந்தோம். அன்னாரின் பாவங்களை மன்னித்து, சொர்க்கத்தில் ஜென்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயர் அந்தஸ்தை அல்லாஹ் அன்னாருக்கு வழங்க வேண்டும் என இறைவனிடம் கையேந்தி பிராத்திப்போமாக!
அழுதும் - தொழுதும் இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனீபாவிற்காக நாமெல்லாம் துஆ கேட்கும் இந் நிலையில், அன்னாரின் சேவைகள் இசைத்துறை பங்களிப்புக்கள் - அவர் பாடிய பாடல்கள் சமு தாய சமயப் பணிகள் யாவும் நம் மனத்திரையில் நிழற்படங்களாக வந்து போகின்றன. அவற்றையெல் லாம் இச்சந்தர்ப்பத்தில் அசைபோட்டுப் பார்ப்பது, நம் பிரார்த்தனையை மேலும் வலுவடையச் செய்யும். ஒரு தனிமனிதன் மட்டும் எண்ணிப் பார்க்கப்பட வேண்டிய ஒரு தனி மரமல்ல. இந்த சமுதாயமே நெஞ்சிருக்கும்வரை நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு தோப்பு என்றால், அது மிகையல்ல.
இஸ்மாயில் என்பார் ஈன்றெடுத்த புதல்வரான இசை முரசு ஹனிபா, இவ்வுலகில் நெடுங்காலம் வாழ்ந்து வரலாறு படைத்தவர். இவரது பிறப்புத் திகதி 25-12-1925 ஆகும். ஆறு பிள்ளைகளின் அருமந்த தந்தையான இவர், ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான இசைப் பிரியர்களை தன் குரல்வளத்தால் தலையாட்ட வைத்தவர். ஒரு வெட்ட வெளியில் நீண்ட காலமாக இருந்து வந்து ஒரு மாமலை, திடீரென காணாமற்போய்விட் டால் ஒரு வெறுமை ஏற்படுமே, அதுபோன்ற ஒரு வெறுமையை வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றவர். இவரின் மறைவின்பின் எத்தனை இசைப்பாடகர்கள் வந்தாலும், ‘இவர் போல ஒருவர்’ உருவாகுவாரா? அமைவாரா? என்ற ஆதங்கத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளார்...!
நூற்றுக்கணக்கான இசைப்பாடல்களை இஸ்லா மிய கீதங்களாகவும் கட்சிப் பாடல்களாகவும், பொதுப்பாடல்களாகவும் பாடிப் போந்த இசை முரசு வின் குரலை பட்டி தொட்டி எங்கணும் ஒலிக் கச் செய்த பெருமையும், அவரது புகழை மென் மேலும் பரப்பிவிட்ட சிறப்பும் நம் இலங்கையையே நம் ‘ரேடியோ சிலோன்’ என அழைக்கப்பட்ட இன்றைய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தையே சாரும் என்றால், அதனை மறுப்பார், மாற் றுக் கருத்துரைப்பார் யார்?
இசைத்துறையில் ஏறத்தாழ அரை நூற்றாண்டை என்றோ கடந்துவிட்ட இவரது ஆரம்ப காலத்தில் முதற் தடவையாக 1950 அளவில் இசை முரசு இலங்கை வந்தார். மெலிந்த உருவத்திற்கு சொந் தக்காரராக இலங்கை வந்தபோது, இலங்கை வானொலியில் முதன்முதல் இஸ்லாமிய கீதம், கொழும்பு - 8, கொட்டா ரோட்டில் இலங்கை வானொலி நிலையம் இருந்தபோது, இசையமைக் கும் கலைஞர்களுக்கெல்லாம் தன் சொந்தப் பணத்தில் காசுகொடுத்து பாடிய, கொழும்பு வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த மர்ஹும் எம். ஏ. ஹஸன் அலியார், நாகூர் இ.எம். ஹனீபாவை முதல்முறையாக இலங்கை வானொலி நிலையத் திற்கு அழைத்துச் சென்று, அறிமுகஞ்செய்து வைத்தார்.
அன்று முதல், சாதாரண இசைப்பாடகராக நிலையத்திற்கு வருகை தந்த நாகூர் இ.எம். ஹனீபாவை, இலங்கை வானொலி நிலையம் நன்கு பயன்படுத்திக் கொண்டது. இவரது ஆரம்ப காலத்தில் இவரது இசைப் பாடல்களை எல்லாம் அடிக்கடி ஒலிபரப்பு செய்து, இவரது குரல் பட்டிதொட்டி எங் கணும் எதிரொலிக்கும் நிலையை ஏற்படுத் தியது. இலங்கை வானொலி நிலையம் தந்த வாய்ப்புக்களை இசைமுரசுவும் நன்கு பயன்படுத்திக் கொண்டார் என்பதுவும் உண்மையே!
இஸ்லாமிய விழுமிய பண்புகளை எல்லாம் தம் பாடல்களின் கருப்பொருளாகக் கொண்டு பாடிய இவர், இஸ்லாமிய வர லாற்றில் பரவலாகக் காணப்படும் முக்கிய சம்பவங்களையும் தம்பாடல்கள் மூலம் பாடி, விவரித்து ஒரு தெளிவை ஏற்படுத் தினார். இதற்கு உதாரணங்களாக எத்த னையோ பாடல்களை தொட்டுக்காட்ட முடியும். ‘பெரியார் பிலாலின்’ - தாயிப் நகரத்து வீதியிலே’, ‘கண்கள் குளமாகுதம்மா’ போன்ற பாடல்களை பதச்சோறாகக் கூற முடியும். இத்தகைய பாடல்களை கேட்கும் ஒவ் வொரு தருணத்திலும் முழு சம்பவமும் நினைவுக்கு வரும்விதமாக ஒரு தெளிவுநிலை ஏற்படும்.
அதேவேளை எத்தனையோ பொதுப் பாடல்க ளையும் பாடியுள்ளார். ‘தலைவாரிப் பூச்சூடி உன்னை’ என்பது முக்கியமான பாடலாகும். இடையிடையே ஹிந்தி, உருதுப் பாடல்களையும் இவர் பாடத்தவறவில்லை. ‘பகவன்’ என ஆரம் பிக்கும் ஹிந்திப் பாடல் பிரசித்தம். ‘இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் ஓர் இஸ்லாமியப் பாடலா அன்றி ஒரு பொதுப் பாடலா? என சந்தேகிக் கும் வகையில் அமைந்துள்ளது. முஸ்லிம்கள் மட்டு மன்றி ஏனைய சகோதர சமய அன்பர்களும் இப்பாடலை இறைவனிடம் கையேந்துங்கள். எவ்வித வேறுபாடுமின்றி பல இன - மத மக்களால் பாடப்பட்ட பாடல் இது.
இவர் அரசியலில் திராவிட முன்னேற்றக் கழ கத்தைச் சார்ந்தவர். தி.மு.க சார்பில் இவர் வாணி யம்பாடி தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டும் உள்ளார்.
1972ல் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் ஆரம்ப காலத்தில் தி.மு.க கட்சிக்காக கட்சிப்பணிக்காக கட்சிக் கூட்டங்களில், மாநாடுகளில் பாடியுள்ளார். “அண்ணா அழைக் கின்றார்...” என்ற பாடல் இவரது கட்சிப் பாடல் களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என தி.மு.க வினர் கட்சித் தொண்டர்களை விளித்துப் பேசுவர். அவ்வாறு படை எனத் திரண்ட தொண்டர் கூட்டத்தில் இசை முரசுவின் “அண்ணா அழைக்கின்றார்” என்ற அழைப் போசையால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்து கொண்டவர்கள் ஏராளம்.... ஏராளம்....
இசைமுரசுக்கு கடந்த காலங்களில் பிரபலமான பலர் பாடல்கள் எழுதிக் கொடுத்துள்ளனர். அப் பாடல்கள் யாவும் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டியவை. இசைமுரசுக்கு பாடல்கள் இயற்றித் தந்தோரில், புலவர் ஆப்தீன், இறையருட் கவிமணி பேராசிரியர் கா. கபூர் போன்றோர் முக்கியமானவர். இறையருட் கவிமணி கபூர் ‘நாயகமே’ என ஒரு கவிதை நூலை எழுதிப் புகழ்பெற்றார். அந்தப் புகழ்பூத்த நாயகமே என்ற நூலின் எல்லாப் பாடல்களையும் நம் இசை முரசு ஹனீபா அவர்கள் தம் இனிய குர லால் பாடிப் புகழ்பெற்றார்கள். அதுதான் “அரு ளாளன் அன்புடையோன் - அல்லாஹ்வின் கருணையதால் - பெருங்கொடையாய் வந்துதித்த பெருமானே நாயகமே என்ற புகழ்பூத்த வரிகளாகும்”
இசைமுரசு ஹனிபா அவர்கள் இலங்கைக்குப் பல முறை விஜயம் செய்துள்ளார்கள். அப்படி வந்த போதெல்லாம் இசைக் கச்சேரி வைத்து, பாடல் பாடி நம் இலங்கை ரசிகர்களை மகிழ்வித்தே சென் றுள்ளார்கள். அதுவும் மறைந்த நம் நாட்டுத் தலைவர்களான ஷிதீஞிளி பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜயவர்தன, டட்லி சேனாநாயக்க, ஆர். பிரேமதாச போன்றோர் முன்னிலையிலும் தன் குரல்வளத்தால் பாடிக் காட்டி இஸ்லா மியப் பாடல்கள் பல அவர்களைக் காந்தம் போல் இழுக்கச் செய்தார். ஆரம்பத்தில் கொழும்பு ஸாஹிராவின் அதிபர் அறிஞர் ஏ.எம்.ஏ. அkஸ் அவர்களின் அழைப்பின் பேரில் கொழும்பு வந்து வை.எம்.எம்.ஏ.மகாநாட்டு மீலாத் விழாக்களில் இசைப்பொழிந்தார்.
அனுராதபுரியில் புரிந்த சாதனை
1992ல் நான் முஸ்லிம் சமய பண்பாட் டலுவல்களின் இராஜாங்க அமைச்சராகவிருந்த காலப் பிரிவில் பல பணிகளுக்கு முதன்முதலாக தேசிய மட்டத்தில் மீலாத் விழாக்களையும் நடத்தினோம். அவற்றுள் 1992ல் அனுராதபுரத்தில் தேசிய மீலாத் விழா நடைபெற்றபோது இதே இசை முரசு ஹனிபா அவர்களே அவ் விழாவுக்கு முக்கிய அதிதியாக அழைக்கப் பட்டிருந்தார்கள்.
அக்காலப் பிரிவில் உள்நாட்டுப் பிரச்சினைகளால் ஊர்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலம். அனுராதபுரத்தில் நடந்தேறிய தேசிய மீலாத் விழாவுக்கு பக்கத்து ஊர்களில் இருந்து வந்திருந்த நம் சன்மார்க்க சமுதாய உடன்பிறப்புகளுக் கெல்லாம், ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த கார ணத்தினால் வீடு திரும்ப முடியாத சூழ்நிலைது இந்நிலையில் என்ன செய்யலாம்? என்ற வினனா வுக்கு, எமது அதிதியாகத் தமிழகத்திலிருந்து வந்து சிறப்பித்த இசை முரசு ஹனிபா அவர்களே விடை தந்தார்கள். அவர் என்ன செய்தார் தெரியுமா?
தனது இசைக்கச்சேரியை உரிய நேரத்தில் முடிக்காமல், அன்றைய இரவு முழுக்க, விடிய விடிய பல்வேறு பாடல்களைப் பாடி, எவருக்கும் எந்த அசெளகரியமும் ஏற்படாமல், நிகழ்ச்சியில் தொய்வு விழாமல் பாடி மகிழ்வித்ததோடு, விழாவையும் கெளரவித்தார்கள் இசை முரசு ஹனீபா அவர்கள்.
இவ்வாறு இசைமுரசு ஹனீபாவின் அருமை - பெருமைகளை நாமெல்லாம் பேசிக் கொண் டேயிருக்கலாம். இலங்கையிலிருந்து யார் தமிழகம், தஞ்சை மாவட்டம் நாகூர் சென்றாலும் இசைமுரசுவின் வீட்டுக்குச் சென்று விருந்துண்டு, இசைமுரசுவையும் கண்டு பேசி வரலாம். வேறு எந்த நாட்டு மாநில மனிதர்களுக்கும் தராத கண்ணியத்தை நம் இலங்கைக்கு, இலங்கையர்களுக்குத் தந்தார் என்றால், அது வெறும் புகழ்ச்சியல்ல, நடைமுறை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அறிஞர் அண்ணா மீதும் கலைஞர் கருணாநிதி காயிதே மில்லத் முஹம்மத் இஸ்மாயில் போன்றோர் மீதும் அப்பழுக்கற்ற அன்பு செலுத்தியவர் நாகூர் ஹனிபா. இதன் காரணமாக நாகூர் வீட்டுக்கு “அண்ணா இல்லம்” “கலைஞர் இல்லம்” “காயிதே மில்லத் இல்லம்” என்று தமது மூன்று வீடுகளுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
இறுதியாக நான் சென்னை சென்றிருந்த பொழுது, எனது உற்றப் பள்ளித் தோழன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், அசோகன் மனவைத் தம்பி, மற்றும் எனது மனைவியுடன் அவருடைய கோட்டூர்புரம் இல்லத்துக்குச் சென்று எமது மனம் கவர் இறை இசை மன்னரைச் சந்தித்து நெடுநேரம் பழைய நினைவுகளை மீட்டிக் கொண்டதை நாம் என்றும் மறவோம். இத்தகைய இசைக்கலைஞரை - இசை முரசுவை நாம் எல்லோரும் கண்ணியம் செய்யவும், அவருக்காக துஆச் செய்யவும் கடமைப்பட்டுள் ளோம். அன்னாரின் பிழைகளை மன்னித்து, சுவர்க்கத்தில் ஜென்னத்துல் பிர்தவ்ஸ் என்ற உன்னத அந்தஸ்தை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்குவானாக! ஆமீன்

ஒரு மனிதர் இறந்தால் அவரது நல்லவற்றை கூறுவது ஒரு முஸ்லிமின் நற் பண்பு இதை இஸ்லாமும் வலியுறுத்துகிறது. இதற்கான நற் கூலி நிட்சயம் இறைவனிடம் உண்டு. மிக்க நன்றி அஸ்வர் ஹாஜியார் அவர்களே.
ReplyDeleteஆனால் ராஜபக்ச மண்டையை போட்டால் எப்படி எழுதுவீர்கள் என்பதை கொஞ்சம் கூறுங்கலென்.
அதற்கும் ஏதாவது உல்டாவைத்திருப்பார்
ReplyDeleteAdghgg
ReplyDeleteசிரிப்பதற்கு நகைச்சுவை பேசும் யாரும் இப்போது பாராளுமன்றத்தில் இல்லாததால் உங்கள் மதிப்பை மக்கள் புரிந்துள்ளார்கள். எப்போது மீண்டும் பாராளுமன்றம் வருவீர்கள்? உங்கள் கனவு எப்படி?
ReplyDelete