Header Ads



முஸ்லிம் சகோதரத்துவ தலைவர்க்கு மரண தண்டனை: எகிப்து நீதிமன்றம் உறுதி செய்தது


எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்சி நீக்கப்பட்டதை கண்டித்து முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் முக்கிய தலைவர் முகமது பாடி உட்பட 22 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

அந்தவகையில், தாக்குதல் நடத்த திட்டமிட்டது, வன்முறை மற்றும் குழப்பத்தை தூண்டியது தொடர்பான வழக்கில் முகமது பாடி மற்றும் 13 பேருக்கு கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. சட்டக் கருத்துக்கள் மற்றும் அரசாணைகளை வெளியிடும் கிராண்ட் முப்தி இந்த தண்டனைகளை ஆய்வு செய்த பின்னர், இன்று அனைத்து குற்றவாளிகளின் மரண தண்டனைகளையும் எகிப்து நீதிமன்றம் உறுதி செய்தது. 

மேலும், அரசால் தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு ஆதரவு அளித்த 36 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகள் மேல்முறையீட்டுக்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. முபாரக் இற்கு ஒரு தண்டனையும் இல்லை. ஜனநாயகமாக தெரிவு செய்ப்பட்ட ஒரு அரசை கவிழ்த்து அதன் தலைவர்களுக்கு மரண தண்டனை. ஏமனில் மூக்கை நுழைக்கும் சவூதி அரேபியா, எகிப்தில் வாலாட்டுமா? சவுதியின் நோக்கம் என்ன? சவூதி ஆதரிப்பது, அராஜகமாக ஆட்சியை கைப்பற்றிய சிஸி யை ஆகும்.

    ReplyDelete

Powered by Blogger.