Header Ads



கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமனம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்குமான அபிவிருத்திக்குழுவின் தலைவராக  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த நியமனமானது ஒவ்வொரு மாவட்டங்களில் இருக்கும் முக்கிய அபிவிருத்திக் கடமைகள், அபிவிருத்தி தொடர்பான முக்கிய விடையங்கள் தொடர்பாக சரியாக ஆராய்ந்து இனங்கண்டு ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தேவையான சேவைகள் என்ன.? கட்டாயம் செய்து முடிக்கப்பட வேண்டிய வேலைகள் என்ன.? என்பதனை எல்லாம் சரியாக இனங்கண்டு உரிய அதிகாரிகள் அரசியல் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி சரிவர செய்ய வேண்டியது கடமை. எனவே எனக்கு சுமத்தப்பட்ட கடமையினை நான் சரியாகச் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.