சுதந்திரக் கட்சி தலைவராக மைத்திரிபால சிறிசேன, பதவியிலிருக்க தகுதியில்லை - முன்னாள் அமைச்சர் சாலிந்த திஸாநாயக்க
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பை உடைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சாலிந்த திஸாநாயக்க இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையை தாம் எதிர்க்கவில்லை. எனினும் அவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக பதவி வகிப்பதற்கு தகுதி இல்லை என்று சாலிந்த குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்கான பணிகளில் ஈடுபடவுள்ளதாக சாலிந்த தெரிவித்துள்ளார்.
.jpg)
இது தான் ரணிலுக்கு தேவையான விடயம். அரசியல் சதுரங்க ஆட்டம் இப்பதான் ஆரம்பிக்கிறது. நடக்கட்டும் நடக்கட்டும்...!
ReplyDelete