Header Ads



மூட்டை முடிச்சுக்களுடன், மைத்திரி வெளியேற வேண்டும், ரணில் சிறந்த தலைவர் - ஞானசாரர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மூட்டை முடிச்சுக்களை எடுத்துக்கொண்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள பொதுபல சேன நாட்டை முதுகெழும்புள்ள ஒருவர் ஆள்வதற்கு வழிவிடுமாறும் அவரை கோரியுள்ளது.

செய்தியாளர் மாநாடொன்றில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள பொதுபலசேனவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் நாட்டின் அரசியல் நிலை குறித்து மக்கள் மத்தியில் பாரிய குழப்பம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு முதுகெழும்புள்ள, தலைமைத்துவ பண்புகள் உள்ள தலைவர் ஓருவர் அவசியம், சிறிசேன நல்ல மனிதர் ஆனால் அவரால் நாட்டை நிர்வகிக்க முடியவில்லை, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் அவரால் நிறைவேற்ற முடியவி;ல்லை. இதன் காரணமாக அவரை பதவியிலிருந்து விலகிச் செல்லுமாறு நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

சிறிசேனவுடன் ஓப்பிடும்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவர் போல தென்படுகின்றது, சிறிசேனவின் தீர்மானங்கள் அனைத்தும் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறான நிலை ஏற்படும் என நாங்கள் முன்னரே தெரிவித்திருந்தோம்,மாற்றம் என தெரிவிக்கப்படுவது இலங்கையின் ஆட்சியை அழிப்பது கண்டு மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் தனது நிகழ்வுகளில் பௌத்த மதத்திற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்குவதில்லை, நாட்டில் பௌத்தமும் சிங்கள இனமும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. You can't play now as in the previous regime so this shows you need a state support to start your work again. Please understand that all communities are living peacefully now.

    ReplyDelete
  2. இவனுக்கெதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்து கூண்டில் அடைக்க வேண்டும் பொருத்தது போதும் பொங்கியெழு

    ReplyDelete
  3. சிறிசேனவும், ரணிலும் மாட்டு வண்டிலை இழுக்கக் கூட சக்தியற்ற இரட்டை தோது மாடுகள், இரண்டுமே ஒன்றுதான். முதுகெலும்பு இருக்கோ இல்லையோ, உறுதியாக செயல்பட முடியாத இருவர். இப்படியே போனால் நாடு சாம்பாரு ஆகிப் போகும், ஞானசார போன்றவர்கள் மிக இலகுவாக ஹிரோ ஆகி விடுவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.