யேமன் விவகாரத்தில் விலகி நிற்போம் - சவுதி அரேபியாவோடு தோளோடு தோள் இருப்போம் - பாகிஸ்தான்
யெமெனில் ஹூத்தி கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்திவரும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியில் பாகிஸ்தான் இணைய வேண்டும் என சவுதி அரேபியா வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், யெமெனில் நடந்துவரும் மோதல் தொடர்பில் எந்த ஒரு தரப்பின் சார்பாகவும் செயலில் இறங்காமல் விலகியே இருப்பது என பாகிஸ்தான் நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை இயற்றியுள்ளது.
யெமென் நெருக்கடியை தீர்க்க உதவுவதில் ராஜீய ரீதியில் பங்களிப்பு செய்யும் தனது வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்வதற்கென பாகிஸ்தான் நடுநிலையாக விலகி நிற்கவே விரும்புகிறது என அத்தீர்மானம் கூறுகிறது.
அதேநேரம் சவுதி அரேபியாவின் நிலப்பரப்பில் எவ்வித அத்துமீறலும் நடக்குமானால், அந்நாட்டுடன் பாகிஸ்தான் தோளோடு தோள் நிற்கும் என அத்தீர்மானம் உறுதியளித்துள்ளது.
சுன்னி பிரிவினர் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தான் சவுதி அரேபியாவின் நெருங்கிய கூட்டாளி நாடாகும்.
அதேநேரம் இரானுடனான பாகிஸ்தின் மேற்கு எல்லையில் பெருமளவில் ஷியாக்களும் உள்ளனர்.
வியாழனன்று இரானின் வெளியுறவு அமைச்சர் இஸ்லாமாபாத் வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

முதலில் இந்த பாகிஸ்தான் அரசியல் சாதிகளுக்கு இஸ்லாம் கற்றுக்கொடுக்க வேண்டும்
ReplyDeleteஎன்னம்மா இப்பிடிப் பன்னுரீங்கலேம்மா..... பாவம் சவூதி.... எதோ ஷியா சுன்னி யுத்தம் போன்று சித்தரிக்க பார்த்தார்கள், ஆனால் பருப்பு வேகாது போலத் தெரிகின்றது.
ReplyDelete