6 வயது குர்திஷ்தான் சிறுமியின் கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.களை வேட்டையாட இயந்திர துப்பாக்கி
இயந்திர துப்பாக்கியின் மீது ஏறி அமர்ந்து ஈராக்கில் உள்ள பாலைவனத்தில் குண்டுமழை பொழியச்செய்யும் ஆறு வயது சிறுமி 400 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக மார்தட்டிக் கொள்ளும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
துப்பாக்கியின் மீது அமர்ந்திருக்கும் குர்திஷ் இனத்தை சேர்ந்த அந்த சிறுமியை தாங்கிப் பிடித்திருக்கும் நபர் ‘கொல்லு.., கொல்லு..,’ என்று இந்த வீடியோ காட்சியில் கூச்சலிட, சரம்சரமாய் இயந்திர துப்பாக்கியில் இருந்து குண்டுகளை அவள் பொழிந்துத் தள்ளுகிறாள். இதுவரை எத்தனை தீவிரவாதிகளை நீ கொன்றிருப்பாய்? என்று அவளுடன் இருக்கும் நபர் கேட்கும்போது நான்கு விரல்களையும் மேலே உயர்த்திகாட்டி ‘நானூறு’ என்று அவள் பதில் அளிக்கும் காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அந்த சிறுமி வெறும் பாலைவனத்தில்தான் சுடுகிறாளா? அல்லது, எதிரே ஏதேனும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதா? என்பது இந்த வீடியோவில் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ISIS பயங்கரவாதிகளின் மனித நேயமற்ற செயல்களை கண்டிப்பது போன்று, இதுவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே. சுட்டதாக சொல்லப் படுபவர்கள் மோசமான பயங்கரவாதிகள் என்கின்ற போதும், ஒரு சிறுமியை இந்த செயலில் ஈடுபடுத்துவது எவ்வகையிலும் அனுமதிக்கப்பட முடியாத ஒன்று.
ReplyDelete