எம்வாசி, குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கோரல்
ஐஎஸ் வாதிகளால் பிடிக்கப்படும் பிணைக் கைதிகளை, ஈவு இரக்கமின்றி கழுத்தை அறுத்துக் கொலை செய்யும் எம்வாசி, தன்னால் ஏற்பட்ட பிரச்னைகளுக்காக தனது குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
ஐ.எஸ். இயக்கத்தினரால் ஜிஹாரி ஜான் என்று அழைக்கப்பட்ட நபர், இங்கிலாந்தைச் சேர்ந்த எம்வாசி என்பது தெரிய வந்ததை அடுத்து, அவரது குடும்பத்தாருக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
எம்வாசியின் குடும்பத்தினர் என்று தெரிந்ததால், அவரது குடும்பத்தாரை அக்கம் பக்கத்தினர் வெறுப்பதையும், ஒதுக்குவதையும் தாங்க முடியாத பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகள், தங்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.
தன்னால் ஏற்பட்ட இந்த பிரச்னைக்கு, தன்னை மன்னிக்குமாறு அவரது குடும்பத்தாருக்கு எம்வாசி கடிதம் எழுதியுள்ளார்.

Post a Comment