Header Ads



சாதாரண பயணியாக, காத்திருந்து விமானத்தில் ஏறிய மைத்திரி

பிரித்தானியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு பயணமானார்.

=9.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான ஈகே651 என்ற சாதாரண பயணிகள் விமானத்தில் டுபாய் ஊடாக லண்டன் நோக்கி ஜனாதிபதி பயணமாகியுள்ளார்.

சாதாரண பயணிகள் போன்றே விதிமுறைகளைக் கடைப்பிடித்து விமானம் புறப்படுவததற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னரே ஜனாதிபதி விமான நிலையத்துக்குச் சென்று அங்கு காத்திருந்து குறித்த விமானத்தில் ஏறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியுடன் அவரின் பாரியார் ஜயந்தி சிறிசேன, ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆலோசகரும் முன்னாள் பிரிட்டனுக்கான தூதுவருமான கிரிஸ் நோனிஸ் அடங்கலான குழுவினரும் இப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரிட்டன் செல்லும் ஜனாதிபதி லண்டனில் 9ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தின மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்தோடு இந்தக் காலப்பகுதியில் மகாராணியையும் மற்றும் அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கமரூனையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதுடன் சகல கட்சிகளின் பாராளுமன்றக் குழுவினருடனும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

No comments

Powered by Blogger.