மஹிந்த ஆதரவு கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி. அன்றிரவே ஒழுக்காற்றுக்கு மைத்திரி உத்தரவு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்கத்தை மீறியுள்ள உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்
கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
எந்தவொரு கூட்டத்திற்கும் செல்ல வேண்டாம் என கட்சியின் செயலாளர் தௌிவாக கூறியுள்ளார். அவ்வாறு அறிவித்துள்ள நிலையில் எவராது ஒருவர் சென்றால் அது கட்சியின் ஒழுக்கத்தை மீறும் விடயமாகும். அந்தக் கூட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரே கலந்து கொண்டார். கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அன்று இரவே கட்சியின் செயலாளருக்கு இது குறித்து அறிவித்துள்ளார். அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. அத்துடன் மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டதாக அறியக்கிடைத்துள்ளது. அவர்களின் பெயர்ப் பட்டியலைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு எதிராகவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
.jpg)
Post a Comment