ராஜித்த சேனாரத்னாவை, நீக்குமாறு கோரிக்கை
அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தொடர்பில் சிறிலங்கா சுதந்திர கட்சி ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தி, கட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என மேல்மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளனர்.
களுத்துறையில் இன்று 08-03-2015 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மேல் மாகாண சபை உறுப்பினர் பியல் நிஷாந்த தமது உறுப்பினர்கள் சார்பாக இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களை அகற்ற வேண்டும் என ராஜித்த சேனாரத்ன அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.
அந்த கருத்தை இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.
தாம் உள்ளிட்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், சிறிலங்கா சுதந்திர கட்சியின் தோல்விக்கான சூழ்ச்சியை மேற்கொண்ட ராஜித்த சேனாரத்ன மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

Post a Comment