Header Ads



இனவாத கோசங்களினால் நாட்டை நகர்த்தக் கூடாது - மைத்திரிபால சிறிசேன

தலைமைப் பதவியை வழங்கினால் அதனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் கட்சித் தலைவர்கள் பதவி விலகிய போது முன்னுதாரணமான முறையில் நடந்து கொண்டனர்.

1977ம்ஆண்டு தோல்வியின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நேர்ந்த நிலைமை எனக்கு நன்றாகத் தெரியும். எதிர்காலத்தில் அவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெறுவதனை தடுக்க மனச்சாட்சிக்கு விரோதமின்றி அனைவரும் செயற்பட வேண்டும்.

நாடு எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை எதிர்நோக்க சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்பட வேண்டும். இனவாத கோசங்களினால் நாட்டை மீளவும் போரை நோக்கி நகர்த்தக் கூடாது. அவ்வாறு நடந்தால் அது பாரியளவிலான போராக மாறிவிடும்.

வரலாற்றில் முதல் தடவையாக வடக்கின் அனைத்து கட்சிகளையும் ஒரே மேடையில் இணைக்க என்னால் முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Well said and well done Mr. President!!

    ReplyDelete

Powered by Blogger.