jaffna muslim செய்திக்கு பலன் - நிந்தவூருக்கு சுகாதார வைத்திய அதிகாரி வந்தார்
-Umar Ali Mohamed Ismail.RGN-
குறிப்பிட்ட செய்தியினைத்தொடர்ந்து ,அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக இருந்த டாக்டர் திருமதி பரூசா நக்பர் அவர்களின் பதவியினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருந்து வந்த டாக்டர் அலாவுதீன் அவர்கள் பொறுப்பெடுத்ததனைத்தொடர்ந்து ,டாக்டர் பரூசா நக்பர் அவர்கள் நிதவூர் பிரதேசத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரியாக நேற்று 2015 Feb 11 ஆம் திகதி கடமையை பொறுப்பெடுத்துள்ளார்.
நிந்தவூர் மக்களின் நீண்ட நாள் குறையினை தீர்த்துவைப்பதற்காக jaffna muslim இணையத்தளம் வெளியிட்ட செய்தியினைத்தொடர்ந்து பிரதேச அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட விழிப்புணர்வின் பிரதிபலனாகவே இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இச்செய்தியைப்பிரசுரித்து குறிப்பிட்ட பிரயோசனமான மாற்றம் நிகழ வழிவகுத்த ஜப்னா முஸ்லீம் இணையத்தளத்துக்கு நிந்தவூர் மக்கள் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
.jpg)
Post a Comment