Header Ads



மஹிந்தவை பிரதமராக்க திட்டம்..! மஹிந்தவின் வருகைக்கு நீங்கள் தயாரா..? பிரச்சாரமும் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட உள்ளது.

தினேஸ் குணவர்தன தலைமையிலான மஹஜன எக்சத் பெரமுன, மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுத்நதிர முன்னணி மற்றும் வாசுதெவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் இவ்வாறு புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க உள்ளன.

இந்தக் கட்சிகள் ஏற்கனவே மக்களை தெளிவுபடுத்தும் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவின் வருகைக்கு நீங்கள் தயாரா என்ற தொனிப்பொருளில் கரத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கருத்தரங்குகளை முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன வழி நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடுமையான சிங்களப் பேரினவாத கொள்கைகளைப் பின்பற்றி வரும் மூன்று அரசியல் கட்சிகளுடன் இடதுசாரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வாசுதேவ நாணயக்காரவும் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. அல்லாஹ் போதுமானவன். எமது கரங்களை ஏந்தி அல்லாஹ்விடமே முறையிடுவோம். இவர் வந்தால் மீண்டும் முஸ்லிம்கள் மீது பலி தீர்க்காமல் விடவேமாட்டார். கலவரங்களை ஞானசாரை மூலம் தூண்டி வேடிக்கை பார்ப்பார். யா அல்லாஹ் இவர்களுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்திடுவாயாக. இவர்களின் திட்டங்களை தவிடுபொடியாக்குவாயாக. இவர்களை மக்கள் வெறுக்கச் செய்வாயாக.

    ReplyDelete
  2. அடிவாங்கிச் செத்துவிட்டது என்று நாம் நினைக்கும் பாம்புகள் கூட காற்றுக்குடித்து நெளிவது வழமைதான்.

    முன்னாள் பெரியவருக்கு மரியாதையாக ஒதுங்கி வாழும் எண்ணமே கிடையாது போலும். கிடைத்த தோல்வியும் அவமானமும் போதாது என்பதுடன் இன்னும் அவமானங்களையும் மக்களின் ஒதுக்கலையும் பெற்றுத்தான் அடங்குவேன் என்று பிடிவாதம் பிடிப்பாராயின் வேறுவழி..?

    இன்றைய அரசு மக்களின் சுமையை அகற்றியுள்ளது போல கடந்தகால மக்கள் விரோத அரசியல்வாதிகளையெல்லாம் சட்டத்தின் முன் நிறுத்தி அரசியலில் இருந்து வடிகட்டிவிட்டால், முன்னாள் பெரியவர் பிரதமராக என்ன ஒரு விதானையாராக கூட வரமுடியாத நிலை ஏற்படும்.

    அதைச் செய்வார்களா..?

    ReplyDelete
  3. MR has been sent home for ever.
    No more coming back! Even if he does
    Not like a king.

    ReplyDelete

Powered by Blogger.