பிரித்தானியா பக்கிங்ஹாமை விட, பெரிய மாளிகையை கண்டுபிடித்துள்ளேன் - ரணில் (வீடீயோ)
கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி சர்வதேச இணைப்பு மத்தியநிலையம் ஒன்று அருகம்பேயில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் நிதி இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
காலி - உலுவிடகே பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிரதமர் இதனை சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை குறைத்ததன் காரணமாகவே, பொருட்களின் விலை பெருமளவாக குறைந்தது.
ஆட்சியாளர்களின் தனிப்பட்ட விரயங்களுக்காகவே அந்த வரிப்பணம் செலவிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பக்கிங்ஹாம் மாளிகையை விட பாரிய மாளிகையொன்றை அரும்கம்பேயில் அண்மையில் தான் கண்டுபிடித்ததாகவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.
.jpg)
Post a Comment