Header Ads



எம்மால் அரசை கைப்பற்ற முடியும், பிரதமரையும் நியமிக்கமுடியும் - முன்னாள் அமைச்சர் மிரட்டல்

அரசை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கவிழ்ப்பதற்கான இயலுமை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ரன்ன பகுதியில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் அரசை நாம் கைப்பற்ற முடியும். இன்று கூட எமக்கு தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தில் கையொப்பிமிடப்பட்ட பிரேரணையொன்றை முன்வைத்து எமது பிரதமர் ஒருவரை நியமிக்க முடியும்.

எமது அமைச்சரவையை நியமிக்க முடியும். புதிய ஜனாதிபதிக்கு கௌரவம் செலுத்தும் வகையிலேயே இந்த நூறுநாள் நிருவாகத்தை முன்னெடுக்க இடமளித்துள்ளோம். 

ஆனால் இந்த அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் ஒத்துழைப்போம் என்பது இதன்மூலம் புலப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களை நோக்குமிடத்து பொலிஸாருக்கு பொறுப்பாக உள்ள அமைச்சர் கடமையை நிறைவேற்றத் தவறியமை தெரியவந்துள்ளது.

இன்னும் சில நாட்களில் பொலிஸார் உரிய முறையில் கடமையை நிறைவேற்றவில்லை என்பது உறுதியானால் பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சரை  தொடர்ந்தும் அந்த பதவியில் வைத்திருப்பதா இல்லையா என்பதை நாம் தீர்மானிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. உண்மைதான் திரு. அமரவீர அவர்களே,

    இந்த நிமிடம் நினைத்தாலும் உங்களால் வானில் எழுந்து பறக்க முடியும். ஆனால் முடியாது.

    இந்த நிமிடம் நினைத்தாலும் உங்களால் தண்ணீரின் மேல் நடக்க முடியும். ஆனால் முடியாது.

    இந்த நிமிடம் நினைத்தாலும் உங்களால் வேறு பிடிமானம் எதுவுமின்றி இரண்டு கால்களையும் தரையிலிருந்து ஒன்றாக உயர்த்த முடியும். ஆனால் முடியாது.

    இந்த நிமிடம் நினைத்தாலும் உங்களால் பற்பசைக் குழாயிலிருந்து பிதுக்கியெடுத்த பசையை மீண்டும் அதனுள் உட்செலுத்த முடியும் முடியும். ஆனால் முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.