Header Ads



வசீம் தாஜுடீனின் படுகொலை - மஹிந்தவின் மகன் கைது செய்யப்படுவாரா..?


இலங்கையின் நட்சத்திர ரகர் வீரர் வசீம் தாஜுடீனின் மர்ம மரணம் தொடர்பில் மீள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விசேட காவல்துறை குழுவொன்று இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தாஜுடீன் இலங்கை தேசிய அணியின் வீரராகவும், ஹெவ்லொக்ஸ் அணியின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி விருந்துபசாரமொன்றில் பங்கேற்று வெள்ளவத்தையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது நாரஹேன்பிட்டியில் மதில் ஒன்றில் அவரது கார் மோதி தீப்பற்றி உடல் கருகி உயிரிழந்திருந்தார்.

இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவிய போதிலும் உயர் அரசியல் அழுத்தம் காரணமாக விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித, தாஜூடீனின் காதலியுடன் தொடர்புகளைப் பேணியதாகவும் இதனால் தாஜுடீன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை குறித்த காதலியும் யோசித தரப்பினரும் நிராகரித்திருந்தனர். மரணம் தொடர்பிலான இரசாயன பகுப்பாய்பு அறிக்கை இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இன்னமும் வெளியிடப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புதிதாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் மூலம் மர்மங்களை வெளிக்கொணர முடியும் என காவல்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

2 comments:

  1. உலகில் எல்லாமே மாறும். அதுபோல மறைக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் என்றோ ஒருதினம் வெளிவந்தே தீரும்!

    ReplyDelete
  2. Why the intelligent officers delaying to arrest him?

    ReplyDelete

Powered by Blogger.