இந்த செய்தி தொடர்பான இருட்டடிப்பு..!
-Kalaiyarasan Tha-
How the media has ignored an act of terror because the victims were Muslim
அமெரிக்காவில், ஒரு வெள்ளையின பயங்கரவாதியினால், மூன்று முஸ்லிம் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், எந்தவொரு ஊடகமும் அந்தத் தகவலை அறிவிக்கவில்லை. ஏனென்றால் பலியானவர்கள் முஸ்லிம்கள். கொலையாளி ஒரு வெள்ளையன். இதுவே மாறி நடந்திருந்தால், அதை ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலாக சித்தரித்து, உலக ஊடகங்கள் நாள் முழுவதும் அலறியிருக்கும்.
நடந்த சம்பவம் பற்றிய விபரம்:
Chapel Hill (North Carolina) எனும் இடத்தில், வீடொன்றுக்குள் புகுந்த பயங்கரவாதி, அங்கிருந்த மூன்று இளைஞர்களின் தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளான். பலியானவர்களின் பெயர்கள்: Deah Shaddy Barakat (23), Yusor Mohammad (21) en Razan Mohammad (21). மூன்று பேரும் உறவினர்கள். Deah Bakarat சிரிய நாட்டை சேர்ந்த, பல் மருத்துவம் பயிலும் மாணவன். பலியான மற்ற இருவரும், பாலஸ்தீனத்தை சேர்ந்த அவரது மனைவியும், மைத்துனியும் (மனைவியின் சகோதரி) ஆவார்கள்.
அமெரிக்க நேரம் மாலை ஐந்து மணியளவில் வந்த பொலிஸ், மூன்று சடலங்களையும் கண்டெடுத்தது. இதற்கிடையே, 46 வயதான Craig Stephen Hicks என்ற கொலையாளியை கைது செய்துள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது. கொலைகளுக்கான காரணத்தை பொலிஸ் இன்னும் தெரிவிக்கவில்லை. ஆயினும், முஸ்லிம்கள் மீதான துவேஷத்தினால் நடந்த கொலைகள் என்று சந்தேகிக்கப் படுகின்றது.
கொலைகள் தொடர்பாக, CNN, FOX போன்ற எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. சமூக வலைத்தளங்களில் அது குறித்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த செய்தி தொடர்பான இருட்டடிப்பு, அமெரிக்க ஊடகங்களின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.
பிற்குறிப்பு: நீண்ட மௌனத்திற்குப் பின்னர், CNN. ABC தொலைக்காட்சிகளில் முக்கியத்துவம் இல்லாத குறுஞ் செய்தியாக தெரிவிக்கப்பட்டது.

Post a Comment