Header Ads



முஸ்லிம் காங்கிரசில் இணைந்துகொண்ட, அதாவுல்லாவின் ஆதரவாளர்கள் (படங்கள்)


(சுலைமான் றாபி)

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள இந்த தறுவாயில், தலைமைத்துவங்களின் நம்பகத்தன் தன்மையைப் பொறுத்து கட்சி தாவல்களும் ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் இன்று  (01.02.2015) பாலமுனை பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் அவர்களின் தலைமையிலான தேசிய காங்கிரசின் பாலமுனை முக்கியஸ்தர்கள் சிலர் இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான  ரஊப் ஹக்கீம்  முன்னிலையில் பொத்துவில் பிரதேச சபையில் வைத்து அக்கட்சியில் இணைந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளருமான எம்.ரி. ஹசன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், தேசிய காங்கிரசின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.எம். ஹனீபா, இளைஞர் அமைப்பாளர் ஐ.ஏ.சிராஜ் மற்றும் இன்னும் முக்கிய முக்கியஸ்தகர்கள் ஸ்ரீ.ல.மு.காவில் இணைந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.