Header Ads



நாம், பயப்பட மாட்டோம் - பொதுபல சேனா

முஸ்லிம் அரசியல்வாதியான அசாத் சாலி, பொதுபல சேனா குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்களை அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில், இலங்கை முஸ்லிம்களை சர்வதேசப் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி ஞானசார தேரர் மற்றும் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே ஆகியோர் வெளியிட்டிருந்த கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுப்பளித்து பொதுபல சேனா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இவ்வாறு கண்டித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தான் வெளியிடாத ஒருகருத்தை, முஸ்லிம்கள் மத்தியில் இன வாதம் மற்றும் மத வாதம் என்பவற்றைத் தூண்டி மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து வரும் அரசியல்வாதியான அசாத் சாலி தெரிவித்துள்ளார். இவரது கருத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தொடர்ந்தும் பொய்யான அறிக்கை விட்டு இவர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றார். நான் சொல்லாத ஒரு செய்தியை தெரிவித்ததாக கூறி, பௌத்த, முஸ்லிம் மக்கள் மத்தியில் இன வாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி, எதிர்வரும் தேர்தலில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும் வெட்கம் கெட்ட ஒரு முயற்சியாகவே இதனை சாதாரண அறிவுள்ள ஒரு முஸ்லிமும் புரிந்துகொள்வார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது மத ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவித அறிவித்தலும் எம்மாள் விடுக்கப்படவில்லை. மூளையுள்ள எவரும் இது தொடர்பில் பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள முடியும். பொலிஸுக்கோ அல்லது தேவையான எவருக்கும் இது குறித்து பார்த்து அறிந்துகொள்ள முடியும்.

சிங்கள பௌத்த மக்களின் பாதுகாப்பு, இருப்பு தொடர்பிலும் குறிப்பாக, மதவாத மற்றும் இனவாத பயங்கரவாதத்திலிருந்து எமது தாய் நாட்டை காப்பதற்குத் தேவையான எந்தவொரு நீதியான போராட்டமொன்றை முன்னெடுக்க நாம் பயப்பட மாட்டோம் எனவும் அந்த அறிக்கையில் பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.