Header Ads



சரித்தவையும், சாரிகாவையும் ஒப்படைத்தார் கோத்தபாய

சட்ட ரீதியாக வைத்திருந்த இரண்டு யானைக்குட்டிகளையும் கோத்தபாய ராஜபக்ஷ மீள ஒப்படைத்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.

இந்த இரண்டு யானைக்குட்டிகளும் பின்னவல சரணாலத்துக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதிலொரு யானைக்குட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பெற்று, கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இவ்விரண்டு யானைக்குட்டிகளையும் தம்மால் பராமரிக்க முடியாது என்ற காரணத்தினால், கோத்தபாய மீள ஒப்படைத்ததாக பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

சரித்த, சாரிகா ஆகிய இரண்டு யானைக்குட்டிகளே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார். 

1 comment:

  1. தன் சொந்தப் பணத்தில் யானை வளர்த்திருந்தால்தானே ஆட்சி போன பின்பும் தொடர்ந்து வளர்க்க 'தில்' இருக்கும்?

    ReplyDelete

Powered by Blogger.