Header Ads



பாண் விலை குறைப்பு, சர்வதேச சூழ்ச்சியின் ஒரு பகுதி - தேசிய சுதந்திர முன்னணி

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பாண் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை, சர்வதேச சூழ்ச்சியின் ஒரு பகுதி என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

முன்னணியின் மத்திய செயல்குழு உறுப்பினர் பியசிரி விஜயநாயக்க, இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

கோதுமை மாவின் விலையை குறைத்ததற்கான பிரதிபலன் அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் கோதுமை மாவினால் உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருட்களை  உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இது தவிர, அதனால் ஏற்படும் நோய்கள் குறித்து எச்சரித்தார்கள்.

கோதுமை மாவின் விலையை குறைக்கும் அதேவேளை, அரிசியின் விலையினை அதிகரிப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்காவின் விவசாயிகள் நன்மையடையும் நிலையில், இலங்கை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் மத்திய செயல்குழு உறுப்பினர் பியசிரி விஜயநாயக்க தெரிவித்துள்ளது.

1 comment:

  1. 'ஆடுநனையுதென்று ஓநாய் அழுததாம்' என்பது இதைத்தானோ..?

    ReplyDelete

Powered by Blogger.