Header Ads



மஹிந்தவின் தோல்விக்கான பொறுப்பை விமல் வீரவன்சவும், ஞானசாரருமே ஏற்கவேண்டும் - விஜயதாச ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் தோல்விக்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும், பொதுபல சேனாவின் கலகொடத்தே ஞானசார தேரருமே பொறுப்பு என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எப்போதும் தோல்வியடையா அரசியல்வாதியாக நாட்டில் வலம் வந்த மஹிந்தவின் தோல்விக்கான பொறுப்பினை விமல் வீரவன்சவும்கலகொடத்தே ஞானசார தேரருமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை தேர்தல் பிரச்சார மேடைகளில் விமல் வீரவன்ச கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த மக்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தினார்கள்.

கலகொடத்தே ஞானசாரர் தொடர்பில் நாட்டு சிங்கள பௌத்த மக்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள்.

எனினும் போதைப்பொருள் வர்த்தகம், எதனோல் சட்டவிரோத இறக்குமதி, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்ச அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு ஞானசார தேரர் கோரியிருந்தார்.

இவ்வாறு விடுத்த கோரிக்கையால் தேரருக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக திரண்டனர். என, மஹரகம பிரதேசத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Not the full truth.Full truth is,all Muslims and Tamils along with Sinhalese voted
    MARA out ! Sinhalese alone,Tamils alone or Muslims alone didn't do it . And the
    very public secret is, the minority votes in bulk, in one voice, decided the turn out.

    ReplyDelete

Powered by Blogger.