Header Ads



பிரபாகரனின் உதவியால் வெற்றிபெற்ற மகிந்த, முடிந்தால் பொதுத் தேர்தலில் போட்டியிட செய்யுங்கள் - ரணில் சவால்

முடியுமாக இருந்தால் மகிந்தராஜபக்ஷவை அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட செய்யுங்கள் என்று, பிரதமர் ரணில்விக்ரமசிங்க சவால் விடுத்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் முழு பொறுப்பாளியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பாடுகிறார்.

அந்த கட்சியின் சின்னங்களாக இருந்த கை, வெற்றிலை மற்றும் கதிரை என்பவற்றின் உரிமைகள் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கே இருக்கின்றன.

இந்த நிலையில் மகிந்தராஜபக்ஷவை எவ்வாறு அவர்கள் தேர்தலில் போட்டியிட செய்வார்கள்?

சக்கர சின்னத்திலா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேநேரம் கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனால்தான் இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்காக சிலர் மகிந்தராஜபக்ஷவை மீண்டும் தேர்தலில் போட்டியிட வைக்க முயற்சிக்கிறார்கள்.

இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களை தாம் நுகேகொட கிளர்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

ஆனால் அவர் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றே தாம் நினைப்பதாக அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு மகிந்தராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட்டாலும், தாம் எந்த தருணத்திலும் தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் மகிந்தவை எதிர்த்து தாம் ஒருமுறை போட்டியிட்டிருந்ததாகவும், அதன் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உதவியால் மகிந்த அந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.