Header Ads



மஹிந்த அரசாங்கம் + புலிகள் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்படும் - பிரதமர் ரணில்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்பத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாவனல்லை பிரதேசத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பணம் மற்றும் கடந்த அரசாங்கத்துடனான தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்திற்கு என்னவாயிற்று என்பதனை அறிந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி புலிகளுடன் தொடர்பு பேணியதாக மஹிந்த அரசாங்கம் குற்றம் சமத்திய போதிலும், உண்மையில் அவர்களே புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்கள், தங்கம் மற்றும் பணம் என்பனவற்றுக்கு என்ன நடந்தது என்பது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தொடர்பில் பகிர்ந்து கொள்ள சில ஆதாரங்கள் உண்டு என வடக்கு மக்கள் கூறி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வாக்களிக்க விடாது தடுத்து நிறுத்தியமை குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்க கடந்த அரசாங்கம் காத்திரமான முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளுக்கு எதிரான தடையை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதனை ஏன் கடந்த அரசாங்கம் இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.