Header Ads



பாராளுமன்றத்திற்கு கறுப்பு பட்டி, அணிந்துவந்த எதிர்கட்சி எம்.பி.க்கள்

பொது மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

வத்தளை பிரதேச சபை தலைவர் தியாகரட்ன அல்விஸ் மீது பிரதேச சபை மாதாந்த கூட்டத்தின் போது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் தொடர்பு இருப்பதாகவும் அதனால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர உள்ளதாகவும் அவர் கூறினார். 

இன்று பிற்பகல் பாராளுமன்றம் கூடிய போதே எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதேவேளை, மொஹான் பீரிஸ் தொடர்பான விசேட விவாதம் தற்போது பாராளுமன்றில் இடம்பெற்று வருகிறது. இரவு 8 மணிவரை இவ்விவாதம் இடம்பெறும்.  இதனை முன்னிட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்தவாறு பாராளுமன்றில் அமர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.