வெலிக்கடை சிறையிலுள்ள திஸ்ஸ அத்தநாயக்கவை, பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டனர்
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையிலான குழுவினரே அவரை பார்வையிட்டதுடன் நலன்விசாரித்துள்ளனர். எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஜோன் செனவிரத்ன, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, லக்ஷ்மன் வசந்த பெரேரா மற்றும் லலித் திஸாநாயக்க ஆகியோரே அவரை பார்வையிட்டுள்ளனர்.
போலி ஆவணங்களை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 11ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அது எப்படித்தான் வீஐபி க்களுக்கெல்லாம் மாமியார் வீட்டுக்குச் சென்றதும் சொல்லி வைத்ததுபோல சுகயீனம் வருகின்றதோ தெரியவில்லை.
ReplyDeleteதவிர, அத்தநாயக்க ஒன்றும் மக்களுக்காகப் போராட்டம் நடாத்தி சிறைக்குச் சென்றிருக்கும் அரசியல் கைதியல்ல. ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரது வெற்றி வாய்ப்பை வெகுமோசமாக பாதிக்கத்தக்கதான ஆவணமொன்றை சட்டவிரோதமான முறையில் போலியாகத் தயாரித்த மோசடிப்பேர்வழி.
இவருக்காக முன்னாள் அமைச்சர்கள் பார்வையிடச் சென்று கண்ணீர்வடிப்பது எதற்காக? நாளை அவர்களுக்கும் இதே நிலைமை வரவிருப்பதை முன்கூட்டியே அறிந்து 'புனிதக்கூட்டு'க்கு இப்பொழுதே ஆயத்தமாகின்றார்களோ..?
பார்கச் சென்றவர்களில் சிலர் திரும்பவும் அங்கு நிரந்தரமாகச் செல்வார்கள்.
ReplyDelete