பொத்துவிலை ஏன் பழிவாங்குகிறீர்கள்...? ஹக்கீமுக்கும், அதாவுல்லாக்கும் என்ன வித்தியாசம்..??
-Razana Manaf-
அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு வரும் பொத்துவில் ஊரை அபிவிருத்திகள், சேவைகள், போன்ற விடயங்களின் மூலம் மேலும் பழிவாங்கவே முயற்சிக்கின்றன சில அரசியல்கட்சிகள்.
சில மாதங்களுக்கு முன்பு பொத்துவில் போக்குவரத்து சபைக்கு இரண்டு சொகுசு பஸ்வண்டிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தரப்பினர் ஒரு பஸ் வண்டியை பறித்து எடுத்திருந்தார்கள்.
எவ்வளவோ போராடியும் சப்பை காரணங்களை கூறி அவருக்கு ஆதரவாக நின்று அந்த விடயத்தை மறக்க செய்துவிட்டார்கள் அவர் தரப்பினர். அந்த கசப்பான சம்பவம் மனதில் இருந்து ஆறுவதற்கு முன்பாக மீண்டும் ஒரு துரோகத்தனம் அரங்கேறியிருக்கின்றது அதே பாணியில்.
பொத்துவில் உப போக்குவரத்து சபையின் மூலம் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ் வண்டிகள் அனைத்தும் மிகவும் பழமையானது.
அந்த பஸ் வண்டிகளில் பயணிக்கும் பயணிகள் அதிகமான அசௌகரியங்களை அனுபவிப்பதுண்டு இதற்கு மாற்றீடாக புதிய பஸ் வண்டிகளை கொடுப்பது அரசின் கடமை அதை முன்னின்று பெற்றுக்கொடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை.
கிடைத்ததை தட்டி பறிப்பது மக்கள் பிரதிகளின் வேலையல்ல அவ்வாறான பிரதிநிதிகள் மக்களுக்கு தேவையா என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும். பொத்துவில் உப போக்குவரத்து சபைக்கு 23 திகதி வழங்கப்பட்ட மூன்று பஸ் வண்டிகளில் ஒன்றை தட்டி பறித்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் கோட்டை என கூறப்படும் பொத்துவில் பிரதேசத்திற்கு அந்த கட்சியின் தலைவர் ஆற்றும் நன்றிக்கடன் இதுதான்.
வழங்கப்பட்ட பஸ் வண்டிகளில் ஒன்று ஏன் குறைக்கப்பட்டது என்பதற்கான நியாய பூர்வ காரணங்களை தேடி பார்த்தேன் அதற்கான விளக்கங்களே இதுவரையில் கிடைக்கவில்லை.
சொகுசு பஸ் வண்டி பறிக்கப்பட்ட போது பொங்கியெழுந்து அறிக்கை விட்ட பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் வாசித் அவர்கள் இதுவிடயத்தில் மௌனம் காக்கிறார் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் இங்கு மௌனம் காக்கிறார்கள்.
அக்கரைப்பற்று டிப்போவிலிருந்து சேவையாற்றி கழிக்கப்படும் பஸ் வண்டிகளே பொத்துவில் டிப்போவிற்கு வழங்கப்படுகின்றது. நிறைய போக்குவரத்திற்கு அதிகமான பஸ் வண்டிகள் தேவைப்படும் நிலையில் அதை கொடுக்காமல் ஏமாற்றுவது நன்றல்ல.
பஸ் வண்டிகளின் பற்றாக்குறையினால் குறுகிய தூரத்துக்கே இப்போது சேவைகள் நடத்தப்படுகின்றன என்பதை அவர்கள் உணரவேண்டும்.
வழங்கப்பட்ட மூன்று பஸ் வண்டிகளில் ஒன்று மறைக்கப்பட்ட காரணம் என்ன என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் சகோதரர் Rauff Hakeem அவர்கள் இதற்கான பதிலை அவரது முகநூல் பக்கத்திலாவது பதியவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
இல்லாதவிடத்து, உங்களுக்கும் சகோதரர் அதாவுல்லாவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய் விடும். ஏனெனில், அவர் செய்ததையே நீங்களும் செய்திருக்கிறீர்கள் அது நம்பிக்கை மோசடி.
பொத்துவில் பி சபை தலைவர் மற்றும் உறுப்பினர் இன்னமும் களவெடுக்க வேண்டுமே அதுதான் மவுனம்.
ReplyDelete