சந்திரிக்கா, அமைதி பேணுவதன் இரகசியம் என்ன..?
முன்னாள் ஜனாதிபதி பண்டாரநாயக்க அமைதி பேணி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தற்போது அமைதி பேணி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சுக்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் நியமனம் தொடர்பில் சில கருத்து முரண்பாட்டு நிலைமையே இவ்வாறு அமைதி பேணுவதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க நிகழ்வுகளில் சந்திரிக்கா பங்கேற்பதில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. தொலைபேசி ஊடாகக் கூட சந்திரிக்காவை தொடர்பு கொள்ள முடியவில்லை என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
.jpg)
அன்று சந்திரிக்கா அம்மையார், தான் இரண்டாவது தடவை ஜனாதிபதியாக இருந்த காலத்தில், இரு தவறுகளைச் புரிந்ததாக குறிப்பிட்டிருந்தார். அவற்றில் ஒன்று திரு.ரணில் அவர்களை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது. மற்றையது திரு. ராஜபக்ஷ அவர்களை அடுத்த ஜனாதிபதியாக்கியது.
ReplyDeleteஇம்முறை அந்த தவறுகளை திரு. மைத்திரி பால எனும் ஒரே கல்லில் இருபறவைகளை வீழ்த்தியதக் மூலம் பிராயச்சித்தம் கண்டிருக்கின்றார்.
முன்பு ஒரு பேட்டியில், தான் எதேச்சாதிகார அரசை வீழ்த்துவதற்காகவே ஓய்விலிருந்து மீண்டு செயற்பாட்டு அரசியலுக்கு வந்தாக கூறியிருந்தார்.
அவரது வேலைகள் தற்போது பூர்த்தியாயிற்று என்பதால் ஏனைய விடயங்களில் தலையிட்டுக் கொண்டிராமல் நாகரீகமாக மீண்டும் ஓய்வுக்குச் சென்றுவிட்டார்.
இதனை சில ஊடகங்கள் பெரிதுபடுத்தி காசு பார்க்க துடிக்கின்றன போலும்.