Header Ads



61 கோடி ரூபா வரி மோசடிக்கு, உடந்தையாக செயல்பட்டதாக மொகான் பீரிசிற்கு எதிராக முறைப்பாடு

முன்னாள் பிரதம நீதியரசர் மொகான் பீரிசின் வெளிநாட்டு பயணங்களை முடக்குமாறு கோரி இருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று 02-02-2015 முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளனர்.

61 கோடியே ஒன்பது லட்சம் ரூபா வரி மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டதாக லஞ்ச ஆணைக்குழுவிடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு இதுவரை விசாரணை செய்யப்படாததன் காரணமாகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணை முற்றுப் பெறும் வரை, அவரது கடவுச்சீட்டை தடுத்து வைக்கும்படி சுங்க பிரதி அதிகாரி சீ.ஆர். ரட்னசிரி மற்றும் சட்டதரணி நாகஹநந்த கொடித்துவக்கு ஆகியோர், மேல் முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

No comments

Powered by Blogger.