Header Ads



இலங்கையின் முதலாது இஸ்லாமிய நூதனசாலைக்கு 50 வருடம் பழமைவாய்ந்த கத்தி தீட்டும் இயந்திரம் அன்பளிப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கலாசார மரபுரிமைகள் அமைச்சின் தேசிய நூதன சாலைத் திணைக்களத்தால் காத்தான்குடியில் அமைக்கப்பட்டு நிறைவுறும் தறுவாயில் இருக்கின்ற இலங்கையின் முதலாது இஸ்லாமிய நூதனசாலைக்கு
சமுல மரத்தினால் செய்யப்பட்டு சுமார் 50 வருடம் பழமைவாய்ந்த சாணக் கல் என்று அழைக்கப்படும் கத்தி தீட்டுவதற்கான இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி இயந்திரத்தை கையளிக்கும் நிகழ்வு நேற்று 19  வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி காரியாலத்தில் இடம்பெற்றது.

இதன் போது கத்தி தீட்டுவதற்கான இயந்திரம் அதன் உரிமையாளரின் குடும்பத்தினால் காத்தான்குடியிலுள்ள இலங்கையின் முதலாது இஸ்லாமிய நூதனசாலையின் ஸ்தாபகரும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.எம்.ஏம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.

இதில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கத்தி தீட்டுவதற்கான இயந்திரத்தின் உரிமையாளர் காத்தான்குடியைச் சேர்ந்த மர்ஹூம் இஸ்மாலெவ்வை முஹம்மது அலியார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இதையாவது வைத்து உஙகளுடைய புத்தியை தீட்டவும்

    ReplyDelete

Powered by Blogger.