Header Ads



ஒரு வாக்கிற்காக 43.000 ரூபா பணத்தைச் செலவிட்ட மஹிந்த - சம்பிக்க ரணவக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒரு வாக்கிற்காக 43000 ரூபா செலவிட்டுள்ளதாக மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு வாக்கிற்காக 43000 ரூபா பணத்தைச் செலவிட்டுள்ளார். இது உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய ஒர் விடயமாகும்.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்திற்காக 250 மில்லியன் ரூபா பணத்தைச் செலவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த 58 லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாக சிலர் பெருமிதமடைகின்றனர்.

உண்மையில் ஒரு வாக்கைப் பெற்றுக்கொள்ள சராசரியாக 43000 ரூபா பணத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த செலவிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையானது முற்று முழுதாக வாக்காளர்களை பணத்திற்கு வாங்கும் செயற்பாடு எனக் கூறின் அது பிழையாகாது என அமைச்சர் சம்பிக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.