மஹிந்த ராஜபக்ச 10 ஆயிரம் கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்ததை சாட்சிகளுடன் நிரூபிக்கமுடியும் - ரவி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி செயலகத்துக்காக நிதியொதுக்கீடு செய்த விதம் தொடர்பில் சாட்சிகளுடன் நிரூபிக்கமுடியும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சில் 11-02-2015 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ரவி கருணாநாயக்க இதனைக்குறிப்பிட்டார்.
ஜனாதிபதி செயலகத்துக்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாக தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது எனினும் அது உண்மைக்கு புறம்பானது என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்
ஜனாதிபதி செயலகத்துக்காக இந்த வருடத்தில் 375 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாகவும் அதில், நூறு கோடி ரூபாய், நாட்டின் பல பகுதிகளின் உள்ள மக்களுக்கான சுகநலன்களுக்காகவே ஒதுக்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்தே சாட்சிகளுடன் மஹிந்த ராஜபக்சவின் 10 ஆயிரம் கோடி நிதியொதுக்கீட்டை நிரூபிப்பதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்
.jpg)
Well, Prove it.
ReplyDeleteGo ahead. Thanks
ReplyDelete