Header Ads



100 கோடிகளை, சுருட்டிய சைபர் கொள்ளையர்கள் (கொள்ளை நிகழந்த விதம் பற்றி விளக்கம்)

சர்வதேச அளவில் நடைபெற்ற சைபர் கொள்ளையில் 100 க்கும் மேற்பட்ட வங்களில் இருந்து சைபர் கொள்ளையர்கள் 100 கோடி டாலர் அளவிலான தொகையை சுருட்டியிருப்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கி லேப் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

ரஷ்யா, உக்ரைன் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து செயல்பட்ட அடையாளம் தெரியாத சைபர் கொள்ளைக்குழு கடந்த 2013 ம் ஆண்டு முதல் இந்த செயலில் ஈடுபட்டதாகவும், இதில் 30 நாடுகளைச்சேர்ந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை நடைபெற்ற கொள்ளையின் போதும் 10 மில்லியன் டாலர் வரை கொள்ளையடிக்கப்பட்டதாகவும், 300 மில்லியன் டாலருக்கு மேல் இவ்வாறு வங்கிகளில் இருந்து களவாடப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது. எனினும் உண்மையில் கொள்ளையடிக்கப்பட்ட தொகை இதைவிட மூன்று மடங்கு அதிகம் இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சைபர் கொள்ளை நிகழந்த விதம் பற்றியும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான வங்கிகளுக்கு சைபர் கொள்ளையர்கள் மால்வேர் எனப்படும் வில்லங்க வைரஸ்கள் அடங்கிய இமெயிலை அனுப்பியிருக்கின்றனர். இதை அறியாத வங்கி ஊழியர்கள் சிலர் அதை கிளிக் செய்து பார்த்துள்ளனர். பின்னர் அவர்கள் அதை மறந்துவிட்டாலும், இமெயிலை கிளிக் செய்ததும் அவர்கள் கம்ப்யூட்டருக்குள் இருந்து வில்லங்க வைரஸ் ஒற்று பார்த்து அந்த விவரங்களை அனுப்பிக்கொண்டிருந்தது. வங்கி ஊழியர்கள் கீபோர்டை பயன்படுத்தும் விதம் உள்ளிட்ட விவரங்களை இந்த வைரஸ் அனுப்பி வைத்திருக்கிறது. வீடியோ பதிவாகவும் இவை சென்றுள்ளன. 

இந்த தகவல்களை கொண்டு கொள்ளையர்கள் வங்கி கணக்கை இயக்குவதற்கான விவரங்களை கறந்ததுடன் வங்கி ஊழியர்கள் செயல்படும் விதத்தையும் தெரிந்து கொண்டுள்ளனர். அதை வைத்துக்கொண்டு வங்கு ஊழியர்கள் போலவே செயல்பட்டு வங்களில் இருந்து பணத்தை போலி கணக்குகளுக்கு மாற்றியும், ஏடிஎம்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை அள்ளிக்கொடுக்கவும் வைத்து கோடிகளை சுருட்டியுள்ளனர்.

இவை வழக்கமான வங்கி பரிவர்த்தனை போலவே மேற்கொள்ளப்பட்டதால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை என்று கூறப்படுகிறது. 

உக்ரைன்  நாட்டில் உள்ள ஏடிஎம் ஒன்றில் திடிரென் ஏடிம் மிஷின்களில் இருந்து பணம் தானாக வெளிவந்ததும் அதை அதிர்ஷ்டசாலிகள் சிலர் அள்ளிச்சென்றதும் காமிராவில் பதிவானதை அடுத்து வங்கி குழப்பமடைந்து ரஷ்யாவின் காஸ்பர்ஸ்கி லேப் உதவியை நாடியிருக்கிறது. இண்டர்போல் உதவியுடன் இது தொடர்பாக விசாரணை செய்த போது தான், இதன் பின் நடந்த சைபர் தாக்குதலை கண்டறிந்து இது சைபர் கொள்ளை என தெரிவித்துள்ளது.

இன்னமும் அந்த கொள்ளைக்குழு கைவரிசயை காட்டி வரலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை தொடர்பாக காஸ்பர்ஸ்கி லேப் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதற்கு முன்பாகவே அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் இந்த அறிக்கை அடிப்படையில் விரிவாக செய்து வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.