மட்டக்களப்பில் ஒரேதடவையில் பிடிபட்ட 10.000 கிலோ நெத்தலி மீன்கள் (படங்கள்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட களுதாவளைப் பகுதியில் நேற்று மாலை மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களின் வலைகளில் பெருமளவான நெத்தலி மீன்கள் பிடிபட்டுள்ளது.குறித்த பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்களின் வலைகளில் சுமார் 10ஆயிரம் கிலோ அளவில் இந்த மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலை மாற்றம் காரணமாக இவ்வாறான மீன்கள் பிடிபடுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


Post a Comment