நமோ நமோ மாத்தா, நம் சிறிலங்கா...!
-Rauf Hazeer-
10--1-2015 ரவூப் ஹகீம் அவர்களுடன் மு.கா பாராளுமன்ற , மாகாணசபை உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒருவர் " இந்தவெற்றி TNA யும் SLMC யும் கொண்டுவந்ததல்ல , இது சிங்கள பெரும்பான்மை வாக்காளர்களினால் விளைந்தது என்று சம்பிக்க ரணவக்க சொல்கிறார் , இதனை நீங்கள் கண்டிக்க வேண்டும் " என்றார் .
அப்போது புன்முறுவலுடன் ஹகீம் இவ்வாறு சொன்னார் :
" சம்பிக்க சொன்னதில் எந்தத் தவறுமே இல்லை .இந்த வெற்றிக்கு நாம் வெளிப்படையாக உரிமை கொண்டாடக் கூடாது .ஹெல உறுமயவின் பங்கு இவ் வெற்றியில் பாரிய செல்வாக்கு செலுத்தி உள்ளதை மறைக்க முடியாது , மகிந்த அரசின் ஊழல்கள் , அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றை மற்ற எவர் சொன்னாலும் சிங்கள மக்கள் கணக்கில் எடுத்திருக்க மாட்டார்கள் . அந்த மக்களுக்குள் செல்வாக்குள்ள அவர்களின் ஒரு முக்கிய அரசியல் கட்சியான ஹெல உறுமய அதனைச் சொன்னதனால் மட்டுமே உண்மையை உண்மை என்று விளங்கி மஹிந்தைக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் . சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் போல 70% -80 % மைத்திரீக்கு வாக்களிக்காது விட்டாலும் , சிங்கள பெரும்பான்மை கொண்ட மஹிந்த வெற்றிபெற்ற தொகுதிகளில் மஹிந்தைக்கும் , மைத்திரீக்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தின் இடைவெளியை ஐ தே கா , ஹெல உறுமய , ஜே வீ பீ போன்ற கட்சிகள் கணிசமான அளவு குறைத்திருக்காவிடின் வெற்றி கை மாறிப் போய் இருக்கும் ."
ஹகீம் இன்னுமொரு விடயத்தையும் இறுக்கமாக குறிப்பிட்டார்
."ஒரு மோசமான இனவாதச் சூழலில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம் . எரிகிற நெருப்பில் , எண்ணெய் வார்க்கிற வார்த்தைப் பிரயோகங்களில் இருந்து நம் வாய்களை கட்டி வைத்தாக வேண்டும் . நம்மால் தான் "யுத்த வெற்றியின் முடிசூடா மன்னன்" மண் கவ்வினான் என்று பெரும்பான்மை இனத்தவர்க்கு நினைக்க இடங் கொடுப்பது நம்மீது அவர்களுக்கு வெறுப்பை வளர்த்து , பழிவாங்கும் உணர்வை அவர்களிடம் விதைத்துவிடும் .ஹெல உறுமய போன்றவர்களுடன் நாம் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதுதான் இனவாதம் தலை தூக்காமல் தடுப்பதற்கான சரியான வழியாகும் , பாருங்கள் , நமது கரையோர மாவட்ட கோரிக்கையை மஹிந்தவின் அணியினர் இனவாதமாக்கி சிங்களவர்களின் வாக்குகளை சூறையாட எத்தனித்தபோது சம்பிகவும் , ரத்தன தேரருந்தான் அதனை சிங்கள மக்களுக்கு விளக்கி எமது கோரிக்கையை நியாயப் படுத்தினார்கள் .அந்தப் புரிந்துணர்வை மூலதனமாகக் கொண்டு நாம் கரையோர அரச அதிபரை பெற்றுக்கொள்ள முயலவேண்டுமே தவிர , மீண்டும் அவர்களை எதிரிகளின் பாசறைக்குள் தள்ளிவிடக் கூடாது ."
மேலும் கூறுகையில் -
"எதிர் காலம் நாம் மிகவும் சாணக்கியமாக நடந்துகொண்டு புரிந்துணர்வை வலுப்படித்திக் கொள்ள வேண்டிய காலமாகும் .இந்த வெற்றியில் அளவுக்கு மிஞ்சிய உரிமை கொண்டாடுவதை தவிர்த்துக்கொண்டு அதற்க்காக நாம்
பொறுமையுடன் முன்னேரவேண்டுமே தவிர , சில்லறை விசயங்களுக்காக சிண்டு முடிந்து கொண்டு சண்டைக்கு போகக்கூடாது " என்றும் சொன்னார் .
ஆம் -
இது
நாட்டின் வெற்றி ,
இது
நமது வெற்றி .
நாம் என்பது
நாம் தான் .
அது
சிங்கள , தமிழ்
முஸ்லிம் , பெர்கர் ,மலே .......
என்கிற இனங்களைக் கடந்தது ,
இலங்கையன் என்கிற
இரத்தத்தில் இணைந்தது .
வாருங்கள் !
பாற்சோறு சமைத்து
பனம் பாணி ஊற்றி
பாயில் அமர்ந்து
சஹனில் சாப்பிடுவோம் !
நமோ நமோ தாயே
நம் ஸ்ரீ லங்கா

very good approach come on, In Sha Allah we can do better than this if we all be friends with other community
ReplyDeletewhatever SLMC say, many people could challenge this , imagine, if SLMC stayed MR side, MY3 could expect more singala vote, who knows, MY3 might win by more vote. because already Muslim peoples have been decided to vote MY3.
ReplyDeleteafter SLMC has been joined bit racism injected to Singalish people, by PBS
at-least now SLMC leader realize this. please keep it up rather change your mind again.
ReplyDeleteபாரட்டப்பட வேண்டிய ஒரு தலைவர் ஹக்கீம்.
ReplyDeleteChampika is right. Total muslim votes in the country is about one million. Out of that, turn over is about 7.5 lakhs( national average turn over of 75%). Out of these votes UPFA muslim votes and rejected votes would be about 1.5 lakhs. If you deduct this total muslim votes for Maithree is about 6lakhs( 10% of his 6 million votes) By a similar calculation, Tamils contributed about one million votes at the most. So total minority votes for Maithree was approximately 1.6 million. Even if you say two million for arguments sake, four million votes came from Sinhalese. This victory has to celebrated very carefully, taking the sentiments of sinhalese in mind. Remember out of 6.2 million votes of Maithree( 4.5 lakhs lead), if 2.5 lakhs decided to vote for Mahinda, he would secure the victory. So sinhalese have the majority share in this victory.
ReplyDeleteMASHA ALLAH.is it 1000%true.extreme not good.
ReplyDeleteextreme will spoil our good future.
நமது மக்கள் மிகவும் புத்தியாக nadanthu கொள்ள வேண்டும் சும்மா வார்த்தைகளை அள்ளி வீசி விட்டு பின்னர் கவலை பட வேண்டாம் நமது சிங்கள சஹோதர்கள் இரண்டாக பிரிய வில்ல என்றால் நாங்கள் அல்ல உலஹில் உள்ள எல்லாரும் சேர்ந்தாலும் my3 janathipathi yaakka mudiyaathu
ReplyDeleteWell said
ReplyDeleteஅருமையாகச் சொன்னீர்கள். சாணக்கியமாக சிந்தித்து செயல் படுவோம்.
சபாஷ் சரியான கவனமான கருத்து ஆனா முஸ்லிம் பகுதிகளில் வெடி போட்டு வீண் பிரச்சினைகளை வளர்க்காது அல்லாஹ் க்கு நன்றி செலுத்த முயற்சி செய்யுங்கள் விசேடமாக பெரும் பான்மை சமூகத்தோடு ஒன்றி வாழ்பவர்கள்
ReplyDeleteits true
ReplyDeleteDoing politics as Sri Lankans will bring more benefits for SL Muslims rather than doing Muslim politics, also certainly this will reduce the hate feelings from non Muslims.
ReplyDeleteMain course for communal vialence is ethnical and religious based political parties which are making conflict of interest between religion and politics.I hope these politicians will make new start and work together as Sri Lankan for better future for all.
பொருத்தமான பதில் நாமும் மற்றவர்களை இனவாதியாக பார்க்கும்போது அவர்களும் நம்மை அதவைிட மோசமான வகையில் பார்ப்பார்கள் நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும் நாட்டில் நாம் மூன்றாம் இடத்து பிரஜைகளாக இருக்கும் நமக்கு இந்தளவுக்கு தலை நிமிர்ந்து பேசுவதர்க்கு அல்லாஹ் பல வழிகளிலும் அருள் புரிந்து இருக்கிறான் அல்ஹம்துலில்லாஹ் நம் சமுதாயமும் ஓரளவுக்கேனும் பூரண முஸ்லிமாக வாழ முயற்சி செய்ய வேண்டும் எந்த இனவாதியையும்நமக்கு உதவியாக மாற்றுவது அல்லாஹ்வின் வேலை ஏன் சம்பிக்க ரணவக பல தேர்தல் மேடைகளில் தலைவர் ரவுப் ஹகீமை நல்லண்தின் அடிப்படையில் பேசியதை அவதானிக்க முடிந்தது ஆகவேஇதை கடந்த காலங்களின் இவருடைய பேச்சுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அல்லாஹ்வின் உதவியால் ஒரு முன்மாதிரியான சமிஞ்சை என்று கூறலாம் நாம் ஆர்வம் கொள்ளும் அரசியல் மற்றும் உலக விடயங்களின் அளவில் அரவைாசி அளவுகூட நம் இருக்கக்கூடிய இஸ்லாமிய கடமைகளை செய்கிரோமா என்று கேட்டால் பதில் சொல்ல முடியாது என்றுதான் கூற முடியும் நாம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கும் போது அவன்படைப்புகளை நமக்கு கட்டுப்பட வைப்பான் சுனாமியும் சூறாவளியும் பொதுபன சேனாக்களின் அட்டகாசங்களும் ஏற்படும் போது பள்ளிகள் நிறம்பி வழிகிறது அதன்பின் என்ன நடக்கிறது சிலவேளை சில தைக்கயாப்பள்ளிகள் தேவையல்லை என்றளவுக்கு எண்ணத்தோன்றுகிறது அந்தளவு தொழுகைகளை புறக்கனிக்கும் நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது விஷேசமாக சொல்லப்போனால்இஸ்லாம் பிறந்த ஊராம் என்று நாம் மார்தட்டும் அறபு நாடுகளில் வாழும் நம்மவர்களின் நிலை மஹா கேவலம் சிலரை தவிர அதிலும் பெரும்பானமை முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் பெரும்பான் இனமக்களுடன் இரண்டற கலந்து வாழும் முஸ்லிம்களிடம் காணக்கூடிய தீன்பற்று இல்லை என்றாகிவிட்டது ஆகவே நாம் அல்லாஹ்வுக்கு அடிபணுந்து நடந்தால் அல்லாஹ்வின் உதவி நம்மை தேடிவரும் என்பதில் சந்தேகம் இல்லை நாம் அல்லாஹ் ஒருவனை மட்டும் யந்தால் எந்த ரணவக்கைக்கும் பயப்பட வேண்டுய அவசியம் இல்லை இன்ஷா அல்லாஹ்
ReplyDeleteஆமாம், முஸ்லிம்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த வெற்றியால் இலங்கை மக்கள் ஒற்றுமைப்பட்டு அவரவர்களது உரிமையைப்பெற்று வாழ்வதற்கு அல்லாஹ்வை வேண்டுவோம்.
ReplyDeleteஇருந்தாலும் இவ்வாக்கத்தில் களையப்படவேண்டிய ஒன்று இருக்கிறது. அது: ''நமோ நமோ தாயே''
ஒன்றாக வாழ்வோம், ஒன்றாகக் களந்திடாது இருப்போம்.