அசாத் சாலியின், அவசர எச்சரிக்கை
-அஷ்ரப் ஏ சமத்-
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த தரப்பு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வெற்றி கொண்டாட்டத்தை பயன்படுத்தி சிறுபான்மை மக்களை பெரும்பான்மை சமூகத்துடன் அல்லது ராணுவம் பாதுகாப்பு தரப்புடன் சண்டை மூட்டிவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இது தொடர்பாக பாதுகாப்ப்பு தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள செய்தியிள் குறிப்பிட்டுள்ளார்.
வரும் தினங்களில் முஸ்லிம்கள் மற்றும் தமிழ் பேசும் மக்கள் மிக அவதனமாவும் நிதானமாகவும் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாங்கள் மிகவும் ஆவேசமாக கருத்துக்கள் சொல்வதை கொஞ்சம் தவிர்த்துக்கொள்வது எமது முஸ்லிம் சமூகத்துக்கு செய்யும் பேருதவியாக அமையும் .
ReplyDeleteமுஸ்லிம்களே! அல்லாஹ் எமக்களித்த வெற்றியை மறந்து, மாற்று மதமக்களின் உணர்வுகளைக் கிள்ளி, பிரச்சினைகளை உருவாக்குவதைத் தவிர்க்கவும். வெற்றிக்குக் காரணம் முஸ்லிம்களும், தமிழர்களும் மாத்திரமே என்ற கருத்தைவிட இனவாதத்துக்கு எதிராக மூவின மக்களும் சேர்ந்ததால் கிடைத்த வெற்றி என்று கூறுவதே சரியானதும், முறையானதுமாகும். அடுத்த தேர்தல் ஒன்று எம்மை எதிர் நோக்க உள்ளதை நாம் மறந்து விடக்கூடாது. மிக நிதானம் அவசியம்.
ReplyDelete