Header Ads



இந்தியாவின் கற்கை நெறிக்கு, இலங்கை உயர் கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் .

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) 

2015, 2016ஆம் ஆண்டுகளுக்கான ஆங்கில மொழி மூலம் இந்தியாவின் காந்தி புலமைப்பரிசில் கற்கை நெறிக்கு இலங்கை உயர் கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

22 வயதிற்கு உட்பட்ட தகுதி வாய்ந்த இலங்கை மாணவர்களிடமிருந்து மேற்படி விண்ணப்பங்களை உயர் கல்வி அமைச்சு அதன் இணையத் தளத்தினூடாக கோரியுள்ளது.  எனவே விண்ணப்பங்களை www.mohe.gon.lk  எனும் இணையத் தளத்தினூடாக பிரவேசித்துப் பெற்றுக் கொள்ளலாம்.

2015, 2016ஆம் ஆண்டுகளுக்கான றோமானி அரசினால் பட்டப்பின் படிப்பு மற்றும் இளமாணி புலமைப்பரிசில்களுக்கான கற்கை நெறிக்கு இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகுதி வாய்ந்த இலங்கை மாணவர்களிடமிருந்து மேற்படி விண்ணப்பங்களை இலங்கைக்கான றோமாணித் தூதரகமூடான  இணையத் தளத்தினூடாக கோரியுள்ளது.  எனவே விண்ணப்பங்களை  www.mae.ro எனும் இணையத் தளத்தினூடாக பிரவேசித்து  விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

No comments

Powered by Blogger.