சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை, இன்று மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்வாரா..?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை இன்று 16-1-2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ளவுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இதன்போது தலைமைப் பொறுப்பை மைத்திரிபாலவிடம் ஒப்படைக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
ஏற்கனவே தலைமை பதவியை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில் கட்சிக்குள் பாரிய பிளவுநிலை ஏற்பட்டிருந்தது.

Post a Comment