நடு இரவில், தேர்தல் திணைக்களத்தை முற்றுகையிட திட்டம் - அம்பலப்படுத்தினார் மங்கள
-அஸ்ரப். ஏ. சமத்-
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற அடுத்த இரவு 1 மணிக்கு தேர்தல் முடிபுகளை எண்னாமல் விடுதவதற்கும் இரானுவத்தை பயண்படுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி ஊரடங்குச் சட்டம் போட்டு ஜனாதிபதி மைத்திரியின் வெற்றியை தடுத்தநிருத்த எடுத்த நடவடிக்கைகளை விசாரணை செய்யுமாறு இன்று பி.பகல் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பு குற்றத் தடுப்பு பணிப்பாளரிடம் முறைப்பாடொன்றை கையளித்துள்ளார்.
அமைச்சர் மங்கள சமரவீர் தனது சட்டத்தரணிகளுடன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில்,
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று வாக்கும் எண்னும் பணியை நடு இரவு 1 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சச, கோட்டாபே ராஜபக்ச, முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் சம்பந்தப்பட்டுள்ளனர்.
இந் நடவடிக்கை தேர்தல் ஆணையாளர் தேசப்பிரியவும், பொலீஸ்மா அதிபர் மற்றும் சட்டத்திணைக்களத்தின் பணிப்பாளரும் வன்மையாக எதிர்த்து நின்றுள்ளனர். அவர்கள் மேற்படி நபர்களுக்கு நீங்கள் செய்யப்போகும் நடவடிக்கை சட்டத்துக்கு மாறானாது இதனை நாங்கள் ஏற்கப் போவதில்லை என விடாப்பிடியாக நின்றுள்ளனர்.
அத்துடன் தேர்தல் ஆணையாளர் அழுவலகம், மற்றும் வாக்கு எண்னும் அழுவலகங்களை பணாகொட இரானுவ முகாமைக் கொண்டு சுற்றிவலைப்பதற்கும் அங்கு கலகங்களை ஏற்படுத்த முயன்றுள்ளனர். இந்த விடயங்கள் அலறி மாளிகை மற்றும் அழுவலகங்களில் சீ.ரீ.சி கமராக்கல் தொலைபேசி போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் புலாநாய்வு பணிப்பாளர் அன்று இரவு நடைபெற்ற சகல புலாநாய்வு தகவல்களை சேகரித்த சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தனது சட்டத்தரணிகள் முலம் முறைப்பாட்டை கையளித்தாக கூறினார்.

Post a Comment