அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவியைக் கைப்பற்ற மகிந்த ராஜபக்ஷ முயற்சி
நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்பட்ட பின்னர் பிரதமர் பதிவிக்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மைத்திரி ஆட்சியின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாது செய்யப்பட்டு பாராளுமன்றத்துக்குப் பதிலளிக்கும் வகையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட்டதும் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
“அந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாகப் போட்டியிட்டுப் பிரதமர் பதவியைக் கைப்பற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தற்போது வெளியிடும் கருத்துக்களினூடாக இந்த விடயத்தை ஓரளவு உறுதிப்படுத்தக் கூடியதாகவுள்ளது.
.jpg)
இன்னும் இவருக்கு புத்தி வரவில்லையா முககுப்பற விழுந்த பிறகும் இது ஒரு வகை மனநோயா இருக்குமோ ஏன் என்றால் இது வரை உலகத்தில் 250 வகையான மனநோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மனோ தத்துவ நிபுணர்களின் அறக்கை ஒன்று கூறுகிறது அதில் ஒன்றாக இவரக்கு இருக்குமோ அல்லது கண்டு பிடிக்கப்படாத நோயாவும் இருக்கலாம் ஏன் என்றால் அளவு கடந்த பதவி மோகம்
ReplyDeleteஅபூ ஜஹ்லை கொலை செய்யும் போது தனது கழுத்தை கொஞ்சம் தாழ்த்தி வெட்டுமாறு கூறினானாம். கொலை செய்யப்பட்டவர்கள் வரிசையாக வைக்கப்படும்போது தனது தலை கொஞ்சம் உயர்ந்து இருப்பதற்காகவே இப்படி கூறினானாம். அதாவது சாவும் போதும் மமதை. இவனும் அவனைப் போன்ற ஓர் மமதையன் போல் தான் உள்ளான்.
ReplyDelete