Header Ads



சவூதி அரேபியாவின் புதிய மன்னர் சல்மான், டுவிட்டரில் சாதனை படைத்தார்

வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய நிலப்பரப்பையும், எண்ணெய் வளத்தையும் கொண்ட இஸ்லாமிய நாடு சவுதி அரேபியா. இதன் மன்னராக 2005-ம் ஆண்டு முதல் அப்துல்லா ஆட்சி செய்து வந்தார். இவருடைய முழுப் பெயர் அப்துல்லா பின் அப்துலாசிஸ் அல் சாத் என்பதாகும்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் அப்துல்லா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டு அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 23-ந்தேதி 1 மணி அளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90.

அப்துல்லா இறந்த தகவலை சவுதி அரேபியாவின் அரச கோர்ட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மன்னர் மரணம் அடைந்தது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளதாக தெரிவித்த கோர்ட்டு இதற்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியது.

அப்துல்லா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் புதிய மன்னராக பட்டத்து இளவரசரும், ரியாத் மாகாண முன்னாள் கவர்னருமான சல்மான் நியமிக்கப்பட்டார்.

79 வயதாகும் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் தான் மன்னரானதும் தனது டுவிட்டர் கணக்கையும் மாற்றினார். (@HRHPSalman to @KingSalman ) கடந்த சனிக்கிழமை டுவிட்டரில்  13 லட்சத்தில் இருந்து 15 லட்சம் பேர் பலோ செய்து உள்ளனர். இது சாதனையாக கருதப்படுகிறது.

அரபு மொழியில்  வெளியிடப்பட்ட அவரது பதிவில்  

அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் ஆன்மா இறைவனிடம்   ஓய்வு  எடுக்கிறது. அது மக்களுக்கு அருள் செய்யும்.  மக்களுக்கு அவர்களது கனவுகளை உண்மையாக்க நான் சேவை செய்ய கடவுளிடம் உதவி  கேட்கிறேன்.  நமது நட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மையை  பாதுகாகவும்  அனைத்து தீய சக்திகளீடம் இருந்தும் பாதுகக்கவும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். என்று கூறபட்டு இருந்தது.

No comments

Powered by Blogger.