ஏர்ஏசியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் கருப்புப பெட்டி இருக்கும் இடம் ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்ட நிலையில், திங்கள்கிழமை அது மீட்கப்படும் என மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.
162 பேருடன் கடந்த மாதம் 28-ஆம் தேதி விபத்துக்குள்ளான விமானத்தின் வால் பகுதி சனிக்கிழமை மீட்கப்பட்டது. ஆனால் விமானத்தின் "கருப்புப் பெட்டி'யை அதில் காண முடியவில்லை.
இந்நிலையில், கருப்புப் பெட்டி வெளியிடும் சமிக்ஞைகள் தொடர்ந்து கடலுக்கடியிலிருந்து வந்தது. விமானத்தின் மையப் பகுதி பல துண்டுகளாக நொறுங்கி கடலின் அடியில் உள்ளது. அந்தத் துண்டுகள் இடையே கருப்புப் பெட்டி சிக்கியுள்ளது தெரிய வந்தது.
நொறுங்கிய விமான பாகங்களை அகற்றி, கருப்புப் பெட்டியை மீட்கும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விமானப் பயணம் குறித்த தொழில்நுட்ப விவரங்கள் விமானத்தின் கருப்புப் பெட்டியில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதனைக் கொண்டு, விபத்துக்கான காரணத்தை அறிந்து கொள்ள முடியும்.
.jpg)
Post a Comment