Header Ads



சிங்கள, தமிழ், முஸ்லிளிடையே பேதத்தை வேண்டிய தேவையில் அரசுக்கு உள்ளது - ரத்ன தேரர்

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே பேதத்தை ஏற்படுத்தி பயங்கரவாதமொன்றை ஏற்படுத்த வேண்டிய தேவையில் அரசாங்கம் உள்ளதாக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று 1-1-2015 கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசாங்கம் தனது கள்ளத் தனமான செயற்பாடுகளை மூடி மறைப்பதற்கு அடிப்படை வாதத்தை தூண்டிவிடுகிறது.

புதிய அரசாங்கத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை எந்த பேதங்களுமின்றி வடக்கில் குடியேற்றவுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கத்துக்கு வடக்கில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கு முடியாமல் போனதாகவும் தேரர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.