Header Ads



பாராளுமன்ற தேர்தலில், கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவேன் - ஆஸாத் சாலி

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஆஸாத் சாலி சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்,

இதுதொடர்பில் தொலைபேசி மூலமாக ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் , பேசிய ஆசாத் சாலி மேலும் குறிப்பிட்டதாவது,

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் என்னை போட்டியிடுமாறு அழைப்பபு விடுக்கப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதிகூட 25 முதல் 20 தொலைபேசி அழைப்புக்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து வந்தன. அவர்கள் எல்லாம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் என்னை கிழக்கு மாகாணத்தில்தான் போடடியிடுமாறு கூறுகின்றனர். 

அண்மையில் நான் உம்றா சென்றிருந்த போதும், கிழக்கு மாகாண இளைஞர்கள் என்னை, தமது மாவட்டங்களில் போட்டியிடுமாறு வற்புறுத்தினர். அவர்களுடைய அன்புக்கு நன்றி. நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களுக்கு சேவையாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளேன். எனது இந்த முடிவு இறுதியானது. இதில் எத்தகைய விட்டுக்கொடுப்புக்கும் இடமிருக்காது. கடந்த மாகாண தேர்துலில் இந்த ஆசாத் சாலி கண்டியை விட்டுவிட்டு போய்விடுவான் என பிரச்சாரம் செய்யப்பட்டது. நான் அப்படி போகப் போவது இல்லை. கண்டி மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பேன்.

அதேவேளை ஊழல் வாதிகளான் மஹிந்த ராஜபாக்ஸ மற்றும் கோத்தபய மீது மைத்திரி தலைமையிலான இந்த அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளi எடுத்தாக வேண்டும். இல்லையேல் அதற்கான விளைவுகளை இந்த அரசாங்கம் எதீர்கொள்ள வேண்டிவருமெனவும் ஆசாத் சாலி எச்சரிக்கை விடுத்தார்.

5 comments:

  1. Ashad Saly is one of the courageous politicians, can't he win in contesting Colombo? or more competition in getting a seat?

    ReplyDelete
  2. He has chance to win win in any district.

    ReplyDelete
  3. Ithukkuthane aasaippattai balakumara

    ReplyDelete
  4. Agree with Brother Ashqar

    ReplyDelete
  5. ஒத்திகை.அங்குரார்ப்பணம்.அரங்கேற்றம்.மேடை.நடிப்பு.நாடகம்.வட்டம்.மாவட்டம்.மாகாணம்.தேசியம்

    ReplyDelete

Powered by Blogger.