மைத்திரிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய, குமார் குணரட்ணம் இலங்கை வருகை..?
-GTN-
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் அதிகாலை குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய தகவல்களும் குமார் குணரட்னத்தின் வருகையை உறுதி செய்துள்ளன.
அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாக தெரிவித்து கடத்திச் செல்லப்பட்டதாக குமார் குணரட்னம் குற்றம் சுமத்தியிருந்தார்.
புலனாய்வுப் பிரிவினர் தம்மையும் சக பெண் செயற்பாட்டாளர் ஒருவரையும் கடத்தித் தாக்கியதாக குமார் குணரட்னம் குற்றம் சுமத்தியிருந்தார்.
நாட்டின் குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிச் செயற்பட்டதாகத் தெரிவித்து குமார் குணரட்னத்தை இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தியதுடன், குடிவரவு சட்டங்களை மீறியதற்காக அபராதம் ஒன்றையும் விதித்திருந்தது.
இந்த அபராதத் தொகை அண்மையில் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஜே.வி.பிக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக முன்னணி சோசலிச கட்சி குற்றம் சுமத்தி வருகின்றது.
இந்த இரகசிய உடன்படிக்கை பற்றி அம்பலப்படுத்தும் நோக்கில் குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம் செய்வார் என கட்சி முன்னதாக அறிவித்திருந்தது.
இதுவரை காலமும் இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்காத அரசாங்கம், மைத்திரிபாலவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து உடனடியாக வீசா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னணி சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுவவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் குமார் குணரட்னம் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
.jpg)
Post a Comment