Header Ads



''பிடிக்க முற்பட்டால் போத்தலால் குத்துவேன்' வேடிக்கை பார்த்த பொலிஸ்

தன்னைப் பிடிக்க முற்பட்டால் போத்தலால் குத்துவேன்  என்று தாண்டவம் ஆடியுள்ளார் பெண் ஒருவர். அதனால் அவரைப் பிடிக்க முற்பட்ட பொலிஸார் செய்வதறியாது கைகட்டி வேடிக்கை  பார்த்தனர்.

தொலைத்தொடர்பு  வயர்களை அறுத்தனர் என்று தெரிவித்து கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரின் தாயே இவ்வாறு யாழ்ப்பாணம் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்துக்கு  முன்பாக தாண்டவம் ஆடினார்.

பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக குறித்த பெண் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக வசைமாரி பொழிந்தார். அவரின் செந்தமிழ் அர்ச்சனையைக் கேட்டு அவ்வழியால் சென்றவர்கள் காதைப் பொத்திக் கொண்டு சென்றனர்.

 பல மணிநேரம் ஆகியும் அவரது வசைமாரி செந்தமிழ் அர்ச்சனையை தாங்க முடியாத பொலிஸார் நடவடிக்கையில் இறங்கினர். அவரைப் பிடித்து அப்புறப்படுத்த பெண் பொலிஸார் அவரை நோக்கிச் சென்றனர். அப்போது அந்தப் பெண் தனது அடுத்த திறமையை காட்டத் தொடங்கினார்.

அருகில் இருந்த கடைக்குள் ஓடிச் சென்று சோடாப் போத்தல் ஒன்றை எடுத்து வந்து அருகில் வந்தால் குத்துவேன் என்று மிரட்டியது மட்டுமல்லாது அவர் தொடர்ந்தும் வசை பாடுவதிலேயே குறியாக இருந்தார்.

பொலிஸாரும் ஒன்றும் செய்யமுடியாது கைகட்டி வேடிக்கை பார்த்ததுடன் மக்களும் காதைப் பொத்திக்  கொண்டு சென்றனர். ஒருமணிநேரத்துக்கும் அதிகமாக வசைபாடிய பின்னர் அவர் தானாகவே அகன்று சென்றார். எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.